நிஜமான செங்கனிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி-சூர்யா!
`ஜெய் பீம்` படத்தை பாராட்டிய கம்யூனிஸ்ட் மாநில செயலாளருக்கு நன்றி தெரிவித்தார் சூர்யா.
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து புனையப்பட்டு மக்கள் மத்தியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி ,வரவேற்பை பெற்ற படம் தான் "ஜெய் பீம்". பழங்குடியின இருளர் சமூகத்தினரின் துயரங்களை துணிச்சலாக எடுத்து காட்டிய படம் . இப்படத்திற்கு சாமானிய மக்கள் தொடங்கி ,திரை பிரபலங்கள் , அரசியல்வாதிகள் என பல தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தமிழக முதல்வர்,உலக நாயகன்,முன்னாள் கேரளா அமைச்சர் உட்பட இன்னும் பல பிரபலங்களும் இப்படத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.ஒருபுறம் எதிர்மறை கருத்துக்கள் வந்தாலும் , நேர்மறை கருத்துக்களால் அவை யாவும் மூழ்கடிக்கப்பட்டு வருகிறது .
நாளுக்கு நாள் இப்படத்திற்கு பாராட்டு பெருகி வரும் நிலையில் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இந்த படத்தை பாராட்டியுள்ளார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சூர்யா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ,"ஜெய் பீம் படத்தை பார்த்து நீங்கள் உணர்வுபூர்வமாக பாராட்டியதற்கு நன்றி. ஏழை எளிய மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் நேரத்தில் எல்லாம் முன்வந்து உதவும் கம்யூனிஸ்ட் கட்சியின் துணிச்சலையும் ,மனித நேயத்தையும் கண்டு நான் பல முறை வியந்திருக்கிறேன் .
ஆண்கள் இந்த படத்தின் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்களிப்பை எங்களால் முயன்ற வரை காட்சிப்படுத்தியுள்ளோம் . அதோடு நீதிபதி சந்துரு மற்றும் காவல்துறை உயர் அதிகாரி பெருமாள்சாமி ஆகியோரின் மனிதநேயத்தையும் இதில் திறம்பட காட்டியிருக்கிறோம். மேலும் பரிதாபமாக உயிரிழந்த ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு ஏதேனும் ஒரு நல்லதை நாங்கள் செய்ய விரும்புகிறோம் .
இந்த வயதான காலத்தில் அவருக்கு உதவும் நோக்கில் 10 லட்சம் ரூபாயை அவரது பெயரில் டெபாசிட் செய்ய இருக்கிறோம் . அதன் மூலம் வரும் வட்டியை வைத்துக்கொண்டு அவர் வாழ்வை நடத்த உதவியாக இருக்கும், அவரது காலத்திற்கு பிறகு அவர் வாரிசுகளுக்கு அந்த பணம் உதவியாக இருக்கும்.மேலும் குறவர் பழங்குடியின மாணவர்களின் கல்விக்கு உதவுவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். எங்கள் ஜெய் பீம் படம் மூலம் பழங்குடியின மக்களின் நிலையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளோம் . மேலும் ஏழை ,எளிய மக்களுக்கு தங்களால் முடிந்த பங்களிப்பை ஆற்றி வரும் உங்களின் செயல்பாடுகளுக்கு நான் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் . அதோடு உங்களது களப்பணி மென்மேலும் தொடர வேண்டும் என வேண்டிகொள்கிறேன்" என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார் .
ALSO READ நடிகர் சூர்யாவை அடித்தால் 1 லட்சம்! பாமக மாவட்ட செயலாளர் அறிவிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR