தமிழகத்தில் கோடைகாலம் தொடங்க உள்ளது. கோடைகாலத்தில் ஏற்படும் வறட்சியைச் சமாளிக்கவும், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் கிடைக்கவும் ரூ.158 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுக்குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியாதவது:-


தமிழகம் முழுவதும் உள்ள நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் தடையின்றி சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை அரசு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் வழங்கல் பணிகளை விரைவில் முடித்து மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.


ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப் பணிகள், குடிநீர் விநியோகம், தெரு விளக்குகள் பராமரிப்பு, துப்புரவுப் பணிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.


புதிய ஆழ்துளை கிணறுகளை அமைத்தல், ஏற்கெனவே உள்ள கிணறுகளில் பழுதடைந்துள்ள குடிநீர் குழாய்களை சீர் செய்தல், செயல்படாத ஆழ்துளை கிணறுகளை புதுப்பித்தல், தண்ணீர் இல்லாத கிணறுகளை மழைநீர் சேமிப்பு அமைப்பாக மாற்றுதல் போன்ற பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.


சென்னை மாநகரில் வரும் கோடைகாலத்தில் மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க வசதியாக, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்துக்கு ரூ.122 கோடியும், நகர மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ள குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.36 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது\. 


இவ்வாறு முதல்வர் பழனிசாமி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.