தமிழகத்தில் 2 புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.165 கோடி நிதி!
தமிழகத்தில் உள்ள 2 புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு 165 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியிருப்பதாக மத்திய மந்திரி தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள 2 புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு 165 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியிருப்பதாக மத்திய மந்திரி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று அ.தி.மு.க. எம்.பி. வேணுகோபால் கேள்விக்கு, மத்திய மந்திரி அனுப்பிரியா பட்டேல் கூறியதாவது:-
>இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் எந்த மருத்துவமனையிலும் உயிரிழப்பு ஏற்படவில்லை
>தமிழகத்தில் உள்ள 2 புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு 165 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியிருக்கிறது.
>திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதன் அரசு மருத்துவமனைக்கு 45 கோடியும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்காக 120 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
>தமிழகம், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் கர்ப்பிணி அல்லாத பெண்களுக்கு ரத்த சோகை நோய்தாக்கம் அதிகம் உள்ளது.
>கேரளா, பஞ்சாப், டெல்லி போன்ற மாநிலங்களிலும் பெண்களுக்கு ரத்த சோகையால் அதிக அளவில் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.