சென்னை ஆர் கே நகர் தொகுதியில் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு பணப் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகாளை மேற்கொண்டு வருகிறது.ஆனாலும்,ஆர் கே நகர்  தொகுதி எங்கும் பண பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் எழுந்த வண்ணம் இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் தேர்தல் அதிகாரி பத்ரா ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் செல்வி என்பவரிடம் இருந்து ரூ. 20 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் தினகரன் ஆதரவாகப் பணப் பட்டுவாடா செய்ய ரொக்கத்துடன் வந்ததாக கூறப்படுகிறது. அவருடன் இருந்த தினகரன் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தி உள்ளனர். 


இது குறித்து தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறுகையில்;- செல்வி எங்கள் அணி வாக்குச்சாவடி முகவரே, அவரிடம் ரூ 20 லட்சம் கைப்பற்றப்பட்டதாக வரும் தகவல் உண்மையல்ல. வாக்குச்சாவடி முகவர் என்பதனால் கையில் ரூ 10,000 வைத்திருந்திருக்கலாம்.செல்வி என்பவர் பூத் வேலையில் ஈடுபட்டுள்ளார்: அவர் ரூ10,000 கூட வைத்திருக்கக்கூடாதா? என கேள்வி எழுப்பினார். தினகரனை தோற்கடிக்கவே வாக்காளர் ஒருவருக்கு ஆளுங்கட்சியினர் ரூ.6000 விநியோகம் செய்கின்றனர்.