திண்டுக்கல்: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தைச் சேர்ந்தவர் பகுருதீன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு திண்டுக்கல் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு ஒர்க்ஷாப்பில் தனது காரின் கண்ணாடிகளை மாற்றுவதற்காக விட்டுச் சென்றுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இன்று தனது காரை எடுப்பதற்காக புதுக்கோட்டையில் இருந்து திண்டுக்கல் வந்த பக்ருதீன் கண்ணாடிகளை மாற்றி விட்டு மீண்டும் ஊருக்கு தனது காரில் சென்றார். 


அப்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள எம்விஎம் கல்லூரி மேம்பாலத்தில் கார் சென்று கொண்டிருந்த போது அவரது காரில் புகை வருவதாக அதே சாலையில் பயணித்த மற்ற நபர்கள் தெரிவித்துள்ளனர். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த பக்ருதின் காரில் இருந்து இறங்கி வருவதற்குள் காரில் மளமளவென தீ (Fire Accident) பரவியதன் காரணமாக கார் முழுவதும் எரிந்து நாசமானது.


ALSO READ | பாம்பை விரட்ட முயன்று தவறுதலாக தனது வீட்டை எரித்த நபர் !


இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் எரிந்து கொண்டிருந்த காரின் தீயை அணைத்தனர். ஆனாலும் கார் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக விட்டது. காரில் உள்ள மின் வயர்களில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.


இதுகுறித்து தாடிக்கொம்பு காவல் நிலைய போலீசார் (TN Police) வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ALSO READ | அசுரன் பாணியில் நில ஆக்கிரமிப்பு : விவசாயி தீக்குளிக்க முயற்சி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR