சாகித்ய அகாடமி விருதுப்பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் புற்றுநோய் காரணமாக 73-வது வயதில் காலமானார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதுவையை சேர்ந்த இவர் 100-க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார். குறிப்பாக இவர் எழுதிய வானம் வசப்படும் என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. 


புதுவை அரசின் சிறந்த எழுத்தாளருக்கான விருது, தமிழக அரசின் சிறந்த எழுத்தாளர்களுக்கான விருதைகள், மேலும் பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.


கடந்த ஓர் ஆண்டு காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதுவை மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 2 மாத காலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.


இந்த சிகிச்சையின் மூலம் உடல்நலத்தில் சிறிது முன்னேற்றம் கண்ட இவர், பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்நிலையில் கடந்த மாதம் 15-ஆம் தேதி அவருக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மதகடிப்பட்டில் உள்ள அதே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் இன்று பிரபஞ்சன் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.