தமிழகத்தின் முதல் டிஜிட்டல் நூலகத்தினை சேலத்தில் ஆட்சியர் ரோகிணி துவங்கி வைத்தார். அதன் பின்னர் டெங்கு கொசு உற்பத்தி குறித்து எடப்பாடியில் ஆய்வு மேற்கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் தமிழகத்தில் முதன் முறையாக சேலத்தில் டிஜிட்டல் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள கிளை நூலகத்தில் இந்த டிஜிட்டல் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. 
நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் நூலகத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி துவங்கி வைத்தார். இந்த நூலகத்தின் மூலம் ஏழை கிராமப்புற மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் தங்களுக்கான படிப்பு மற்றும் தொழில் சம்பந்தமான சந்தேகங்களை அறிந்துகொள்ள முடியும் என ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.


இந்த நூலகத்தில் அரசியல் கலை இலக்கியங்கள் குறித்த சந்தேகங்களையும் தெளிவுபடுத்திக் கொள்ள ஏதுவாக வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் நூலகத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமப் புறங்களில் உள்ள நூலகத்திற்கும் விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்த நூலக திறப்பு விழாவிற்கு பின்னர் எடப்பாடியில் உள்ள அம்மா உணவகம் மற்றும் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் டெங்கு கொசு உற்பத்தி குறித்து ஆட்சியர் ரோகிணி ஆய்வு மேற்கொண்டார்.