உருக்காலை தனியார்மயமாக்குதலை கண்டித்து காங்., உண்ணாவிரதம்!
சேலம் உருக்காலையை தனியார்மயமாக்குதலை கண்டித்து சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் உருக்காலையை தனியார்மயமாக்குதலை கண்டித்து சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் உருக்காலையை தனியார்மயமாக்குதல் கண்டித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைப்பெற்று வருகிறது. உருக்காலை தொழிலாளர்களும் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உருக்காலையை தனியார் மயமாக்குவதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
இந்த அறிவிப்பின் படி இன்று சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக பெரிய அளவில் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு தலைமை தாங்கினார். சேலம் மாநகர் மாவட்ட தலைவர் ஜெயப்பிரகாஷ் வரவேற்று பேசினார். செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம், வாழப்பாடி ராமசுகந்தன், முன்னாள் எம்.பி.தேவதாஸ், கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே. அர்த்தனாரி, மேற்கு மாவட்ட தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இந்த உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சிரிவெல்ல பிரசாத், செயல் தலைவர் ஜெயக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. கோபிநாத் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குட்டப்பட்டி நாராயணன், பழனிமுத்து, பழனிச்சாமி, எம்.ஆர். சுந்தரம், புவனா ஜெயராமன், திருஞானம், காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் எஸ்.கே. அணை அரசு, முன்னாள் மாவட்ட தலைவர்கள் எம்.பி.எஸ். மணி, செல்வராஜ், கோபால், பெரியசாமி, ராமநாதன், கிருஷ்ணசாமி, பன்னீர்செல்வம், மேகநாதன், பொருளாளர்கள் ஏ.ஆர்.பி. பாஸ்கர், ஓசுமணி, ரத்தினம், பொதுக்குழு உறுப்பினர்கள் வைத்திலிங்கம், சக்கரவர்த்தி, எம்.டி. சுப்பிரமணியம், தாரை குமரவேல், பாண்டியன், திருமுருகன், சந்திரன், ஷேக் இமாம், ரகுராஜன், சாரதாதேவி, பட்டதாரி பிரிவு ஒருங்கிணைப்பாளர் வசந்தம் சரவணன், மாநகர நிர்வாகிகள் சாந்தமூர்த்தி, சிவகுமார், வரதராஜ், விஜயராஜ், ராஜ்பாலாஜி, துணைத் தலைவர் மெடிக்கல் பிரபு, பச்சப்பட்டி பழனி, கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அருளானந்தம், முனுசாமி, சசி, சதீஷ், மணிகண்டன், தீனதயாளன், ஸ்ரீபதி மற்றும் துணைத் தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், வட்டார பேரூராட்சி தலைவர்கள், சார்பு அணியை சேர்ந்தவர்கள் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.