சேலம்: சிலிண்டர் விலை உயர்வை திரும்பபெறக்கோரி பிச்சை எடுத்து போராட்டம்
சமையல் எரி வாயு விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி சேலத்தில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து பிச்சை எடுத்து நூதன முறையில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை திடீரென உயர்த்தப்பட்டது. 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த நாளே வீட்டு உபயோக சிலிண்டர்கள் 50 ரூபாயும், வணிக சிலிண்டர்களின் விலை 350 ரூபாயும் உயர்த்தப்பட்டன. இது அன்றாட வேலைக்கு செல்வோருக்கு கூடுதல் சுமையாகவும், டீக்கடை உள்ளிட்ட கடைகளை நடத்தும் வணிகர்களுக்கு பேரிடியாகவும் அமைந்தது. இதனால் அதிருப்தியடைந்த மக்கள் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து பிச்சை எடுக்கும் நூதன போராட்டம் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் ஜீவானந்தம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
மத்திய அரசு சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர். ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் விலை உயர்வு இருப்பதாக குற்றம்சாட்டிய அவர்கள், மத்திய அரசு தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருவதாகவும் தெரிவித்தனர். மேலும், விலை உயர்வை திரும்பப் பெறாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்தனர். இதனையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க | வடமாநிலத்தவர்கள் இல்லாததால் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ