சேலம்: சேலத்தில், மும்பைக்கு தான் சென்றுவந்த தனது பயண வரலாற்றை (Travel History) மறைத்து, சுமார் 20 பேருக்கு கோவிட்-19 தொற்று பரவ காரணமாக இருந்த 30 வயது நபர் மீது தொற்றுநோய் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த நபர் உட்பட தொற்றால் பாதிக்கப்பட்ட 20 பேரும் சேலத்தின் அரசு மோஹன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.


சேலம் (salem) மாவட்டத்தில் 1288 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து, ஜூலை 4 முதல், சேலம் மாநகராட்சி அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று சோதிப்பதற்கான செயல்முறையை துவக்கியுள்ளனர். இந்தப் பணியில் சுகாதாரத் துறையைச் சேர்ந்த சுமார் 680 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக SMC ஆணையர் ஆர்.சதீஷ் கூறினார்.


தடகப்பட்டியில் உள்ள ஸ்ரீரங்கன் தெருவுக்கு பணியாளர்கள் சென்றபோது, 30 வயது நபர் ஒருவர் சமீபத்தில் மகாராஷ்டிராவிலிருந்து திரும்பியது பற்றி அவர்களுக்கு தெரிய வந்தது. அவர் சேலத்தில் வெள்ளி ஆபரணங்களை தயாரிக்கும் பணியில் இருந்ததாகவும், தன் தொழில் ரீதியாக மும்பைக்கு (Mumbai) சென்றதாகவும் தகவல் கிடைத்தது. மகாராஷ்டிராவிலிருந்து சேலத்திற்கு திரும்ப அந்த நபர் E-Pass-ம் வாங்கவில்லை என்பதும் தெரிய வந்ததாக ஆணையர் தெரிவித்தார்.


ALSO READ: தமிழகத்தில் படிப்படியாக குறையும் கொரோனா; இன்று 3,616 பேருக்கு தொற்று உறுதி..!


இதன் பிறகு, அந்த நபர், அவரது மனைவி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. அனைவருக்கும் கோவிட்-19 (Covid-19) தொற்று இருப்பது தெரிய வந்தது. மும்பையிலிருந்து சேலத்திற்கு திரும்பிய பிறகு, கடந்த ஒரு வாரத்தில், அந்த நபர் ஸ்ரீரங்கன் தெருவில் பலமுறை சுற்றியிருந்தார்.


சுகாதாரத் துறை ஊழியர்கள் உடனடியாக அந்தத் தெருவில் இருந்த சுமார் 250 பேருக்கு கொரோனா சோதனையை மெற்கொண்டனர். அதில் 17 பேரின் அறிக்கை நேர்மறையாக வந்துள்ளது.


தான் சேலத்திலிருந்து மும்பை சென்றதையும், மீண்டும் சேலம் வந்தது பற்றிய தகவல்களையும் பற்றி மாநகராட்சிக்கு தகவல் அளிக்கவில்லை என்றும், இதனால், அவரால் மேலும் 20 பேருக்கு தொற்று பரவியது என்றும் மாநகராட்சி அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவல்துறை அவர் மீது வழக்கு பதிவு (booked) செய்துள்ளது.


ALSO READ: திருச்சியில் அதிர்ச்சி!! 104 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோயை பரப்பிய துரையூர் வாலிபர்