சேலம் பஸ்சில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை
சேலம் தனியார் பஸ்ஸில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இரவு 9 மணிக்கு சேலத்தில் இருந்து ஓமலூர் அருகே உள்ள நார்ணம்பாளையத்திற்கு ஒரு தனியார் பஸ் சென்றது. நேற்றிரவு 10 மணிக்கு அந்த பஸ் நார்ணம்பாளையம் சென்றடைந்தது. அப்பொழுது பஸ்சில் இருந்த பயணிகள் இறங்கி சென்றனர்.
ஆனால், சிறுமி பஸ்சுக்குள் வைத்து மணிவண்ணன், முருகன் மற்றும் பெருமாளிடம் உட்பட 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த 3 பேரையும் அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து தீவெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.