சேலம் மாவட்டம், ஓமலூர் நகரில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சார்பு நீதிமன்ற நீதிபதியாக சுவேதரன்யன் பணியாற்றி வருகிறார். இவர் நீதிமன்றம் அருகேயுள்ள பிருந்தாவன் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர் பின்பக்க கதவை உடைக்க முயன்றுள்ளார். அப்போது சத்தம் கேட்டு வீட்டின் வெளிப்புற மின்விளக்குகளை போட்டதும், திருடன் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளான். பின்னர் நீதிமன்றம் அருகே வசிக்கும் அர்ஜுனன் வீட்டிற்குள் புகுந்த திருடன், அர்ஜுனன் மனைவி அணிந்திருந்த தாலிக்கொடி, கழுத்து செயின் உட்பட 9சவரன் நகைகளை பறித்து சென்றுள்ளார். சத்தம்போட்டு கத்துவதற்குள் கத்தியை காட்டி மிரட்டிவிட்டு தப்பியோடியுள்ளான்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | "மதுக்கடைகள்' மூடப்படும் - வெளியான அறிவிப்பு


பின்னர் அவரது வீட்டின் அருகில் வசிக்கும் சிலம்பரசன் வீட்டிற்கு நான்கு பேர் திருட சென்றுள்ளனர். ஆனால், அக்கம்பக்கம் இருப்பவர்கள் சத்தம்போட்டதால் அங்கிருந்து அனைவரும் தப்பி சென்றுள்ளனர். இதேபோல், ஓமலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஆர்.சி.செட்டிபட்டி பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள், 5 பீரோக்களை உடைத்து 50 சவரன் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.


ALSO READ | விழுப்புரம்; தடுப்பூசி போட்டுகொண்ட மாணவி மயக்கம்..!


காடையாம்பட்டி அருகேயுள்ள நடுப்பட்டி கிராமத்தில் வசிக்கும் மாரியப்பன் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் பணம் மற்றும் நகைகள் என ஒரு லட்சம் மதிப்பில் திருடி சென்றுள்ளனர். இந்ததொடர் திருட்டுக்கள் குறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ் திருட்டு நடந்த பகுதிகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். கொள்ளையர்களின் தடயங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR