ஆர்கேநகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக சமூக வலைத்தளங்ளில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவது குறித்து பதிலளிக்க சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இரட்டை இலை சின்னத்தை 
இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களில் பயன்படுத்த கூடாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயலலிதா மறைவை அடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.


இதற்கான வேட்பு மனு தாக்கல், 16-ம் தேதி துவங்குகிறது. ஆர்கேநகர் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவு அடைந்தது. இன்று வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும். மனுவை திரும்ப பெற விரும்புவோர் 27-ம் தேதி மாலை 3:00 மணிக்குள் பெற வேண்டும். அன்று மாலை, வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும். ஏப்ரல் 12-ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். ஏப்ரல் 15-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். 


இதனிடையே, அதிமுக அம்மா அணியின் டிடிவி தினகரன் தரப்பினர் முடக்கப்பட்ட அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை சமூக வலைத்தளங்களில் பயன்படுத்துவதாக அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.


இதன் எதிரொலியாக, இரட்டை இலை சின்னத்தை சமூக வலைத்தளங்களில் பயன்படுத்து பதிலளிக்க அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாளை மறுநாள் காலை 11 மணிக்குள் இதற்கான பதிலை அளிக்க வேண்டும் என்றும் அவகாசம் அளித்துள்ளது.


ஏற்கெனவே, இரட்டை இலை யாருக்கு என்பது குறித்து முடிவு செய்வது குறித்து தேர்தல் ஆணையம் சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதற்கு சசிகலா சார்பாக டிடிவி தினகரன் பதில் அளித்தும் அதை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம், சசிகலா தான் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.