டிசம்பர் 31-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் அதிமுக புதிய பொதுச்செயலாளராக பதவி ஏற்றார். கடந்த மாதம் அவர் அதிமுக நிர்வாகிகளை மாவட்ட வாரியாக அழைத்து ஆலோசனை நடத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு சில தலைவர்கள் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபடாமல் உள்ளனர். சிலர் சற்று அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. அவர் கள் அனைவரையும் அரவணைத்து செல்லும் வகையில் அதிமுக மூத்த தலைவர்களுக்கு சசிகலா புதிய பொறுப்புகளை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.அதை உறுதிப்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர்கள் உட்பட 23 பேருக்கும் புதிய பொறுப்புகளை சசிகலா வழங்கியுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று காலை அவர் வெளியிட்டார். 


அந்த அறிக்கை நிலவரம்:-


அதிமுக தலைமை கழக நிர்வாகிகளாகவும், துணை நிர்வாகிகளாகவும் கீழ்க்கண்டவர்கள், கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.


1. கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. - கழக அமைப்புச் செயலாளர்.


2. எஸ்.கோகுலஇந்திரா - கழக அமைப்புச் செயலாளர். (முன்னாள் அமைச்சர், தென்சென்னை வடக்கு மாவட்டம்)


3. சைதை துரைசாமி - கழக அமைப்புச் செயலாளர் (சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர்)


4. பி.வி.ரமணா - கழக அமைப்புச் செயலாளர் (முன்னாள் அமைச்சர், திருவள்ளூர் மேற்கு மாவட்டம்)


5. வரகூர் அருணாசலம் - கழக அமைப்புச் செயலாளர் (தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை முன்னாள் துணைத் தலைவர்)


6. வி.சோமசுந்தரம் - கழக அமைப்புச் செயலாளர் (முன்னாள் அமைச்சர், காஞ்சீபுரம் மேற்கு மாவட்டம்)


7. பி.எம்.நரசிம்மன் எம். எல்.ஏ. - கழக அமைப்புச் செயலாளர் (திருவள்ளூர் மேற்கு மாவட்டம்)


8. எம்.எஸ். நிறைகுளத்தான் - கழக அமைப்புச் செயலாளர் (முன்னாள் எம்.பி., ராமநாதபுரம் மாவட்டம்)


9. எஸ்.அன்பழகன் - கழக அமைப்புச் செயலாளர் (முன்னாள் எம்.பி., நாமக்கல் மாவட்டம்)


10. கே.அண்ணாமலை - கழக அமைப்புச் செயலாளர் (தென்காசி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., திருநெல்வேலி புறநகர் மாவட்டம்)


11. கே.கே.உமாதேவன் - கழக அமைப்புச் செயலாளர் (திருப்பத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சிவகங்கை மாவட்டம்)


12. வி.கருப்பசாமி பாண்டியன் - கழக அமைப்புச் செயலாளர் (முன்னாள் எம்.எல்.ஏ., திருநெல்வேலி புறநகர் மாவட்டம்)


13. புத்திசந்திரன் - கழக அமைப்புச் செயலாளர் (முன்னாள் அமைச்சர், நீலகிரி மாவட்டம்)


14. என்.ஆர்.சிவபதி - கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர். (முன்னாள் அமைச்சர், திருச்சி புறநகர் மாவட்டம்)


15. என்.முருகுமாறன் எம்.எல்.ஏ. - கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச்செயலாளர் (காட்டு மன்னார்கோவில் தொகுதி, கடலூர் மேற்கு மாவட்டம்)


16. அமைச்சர் டி.ஜெயக்குமார்- கழக மீனவர் பிரிவுச் செயலாளர்.


17. நீலாங்கரை முனுசாமி - கழக மீனவர் பிரிவு இணைச் செயலாளர் (காஞ்சீபுரம் கிழக்கு மாவட்டம்)


18. கே.குப்பன் - கழக மீனவர் பிரிவு இணைச் செயலாளர் (முன்னாள் எம்.எல்.ஏ., திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்)


19. கே.ஏ.ஜெயபால் - கழக மீனவர் பிரிவு இணைச் செயலாளர். (முன்னாள் அமைச்சர், நாகப்பட்டினம் மாவட்டம்)


20. நயினார் நாகேந்திரன் - கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் (முன்னாள் அமைச்சர், திருநெல்வேலி மாநகர் மாவட்டம்)


21. டாக்டர் வைகைச் செல்வன் - கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் (முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்டம்)


22. டாக்டர் கோ.சமரசம் - கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் (தலைமைக் கழகப் பேச்சாளர்)


23. எஸ்.கே.செல்வம் - கழக புரட்சித்தலைவி பேரவை துணைச் செயலாளர் (வீரபாண்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., சேலம் புறநகர் மாவட்டம்)


அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., (இவர் ஏற்கனவே வகித்து வரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார்)


அதிமுக மீனவர் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் நீலாங்கரை எம்.சி.முனுசாமியும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.


கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன் என சசிகலா கூறியுள்ளார்.


இந்த நியமனங்களைத் தொடர்ந்து விரைவில் மாநில அளவில் மேலும் சிலரை அதிமுக நிர்வாகிகளாக பல்வேறு பொறுப்புகளுக்கு சசிகலா நியமனம் செய்வார் என்று தெரிகிறது.