மீண்டும் பரோல் கேட்டு சசிகலா மனு தாக்கல்
மீண்டும் பரோல் கேட்டு பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்து உள்ளனர். இந்நிலையில், உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள தனது கணவரை காண செல்ல வேண்டும் என 15 நாட்கள் பரோல் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவில் குளறுபடி இருந்ததால் சிறை நிர்வாகம் அதனை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், மீண்டும் பரோல் கேட்டு சசிகலா தரப்பில் சரியான ஆதாரத்தோடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தகவல் வந்துள்ளது.