தமிழகத்தில் பிரபலமான கல்லூரிகளுள் ஒன்றாக விளங்குவது, சத்யபாமா பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவ மானவிகளுள் 93.09 சதவிகிதம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக ஒரு ஆண்டுக்கு 45.59 லட்சம் ஊதியத்தில் தேர்வாகியுள்ளனர். இதில் பார்வையற்ற 5 பேர் ஐ.ஐ.எம் கல்லூரியில் உயர்கல்வி பயில தேர்வாகியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சத்தியபாமா சாதனையாளர்கள் தினத்தை கொண்டாடும் வகையில் 2024-ம் ஆண்டில் சிறந்த வேலை வாய்ப்பு முகாமில்  தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக    நடைபெற்றது.


நிறுவனத்தின் வேந்தர் முனைவர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் முனைவர் மரிய ஜான்சன், துணை தலைவர்கள் அருள் செல்வன், மரிய பெர்னதெத் தமிழரசி, மரிய கேத்ரின் ஜெயப்ரியா ஆகியோர் விழாவிற்கு தலைமையேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி கௌரவித்தார்கள்.


வேலைவாய்ப்புக்கு பதிவு செய்த மாணவர்களில் 93.09% விழுக்காடு மாணவர்கள், பல்வேறு துறைகளில் உயர்ந்த ஊதியத்துடன் பணி அமர்த்தப்பட உள்ளனர். 2024-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் உருவாக்கம், ஆலோசனை வழங்கல், நிதி மேலாண்மை, செயலாக்கம், விற்பனை மற்றும் விளம்பரப்படுத்துதல் போன்ற பல்வேறு பிரிவுகளில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் வருகைபுரிந்து இந்தாண்டு மொத்தமாக 2454 பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | அசுர வேகத்தில் காரை ஓட்டிய சிறுவன்! சிதறிய கடை... திக்திக் CCTV காட்சிகள்


சத்தியபாமா நிகர்நிலை பல்கலைகழகத்தில் இலவசமாக படித்து வந்த 5 பார்வையற்ற ஒரு பெண் உள்ளிட்ட மாணவர்கள் ஐ.ஐ.எம். கல்லூரியில் படிக்க தேர்வாகியவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி ஊக்கப்படுத்தினர். 
                                                                                                    
வேலைவாய்ப்பு வளாகத்தேர்வுக்கான முக்கிய அம்சங்கள்:
1. மாணவர்களுக்கு கிடைக்கப்பெற்ற உச்ச ஊதியம், ஆண்டுக்கு 45.49 லட்சம்
2. சராசரி ஆண்டு ஊதியம் 5.40 இலட்சம்
3. புதிய நிறுவனங்களில் பல்வேறுபட்ட விரும்பத்தக்க பணிவாய்ப்புகள்
வழங்கப்பட்டன.
4. சத்யபாமா நிகர்நிலை பல்கலைகழகம், SERVICE NOW, PWC, ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் மாணவர்களுக்கு பணி வழங்கியிருக்கிறது.
5. சத்தியபாமா நிகர்நிலை பல்கலைகழகம் சார்பில் சுமார் 300 க்கும் மேற்பட்டமாணவர்கள் அமெரிக்கா, லண்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஐயர்லாந்து, கன்னடா, ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளில் மேற்படிப்பை தொடங்க ஏற்பாடு செய்துள்ளனர்.
6. பார்வையற்ற மாணவர்களில் 5 பேர் மதிப்புமிக்க ஐஐஎம்-களில் உயர்க்கல்வி பயில அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ