சசிகலா முதல்வராக தடை விதிக்க கோரி ஐகோர்டில் வழக்கு!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக சசிகலா
ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் கூடிய விரைவில் தமிழக முதல் அமைச்சராக பதவியேற்க உள்ளார். இதற்கான தீர்மானத்தை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்மொழிந்தார்.
இந்நிலையில் இன்று சட்டப் பஞ்சாயத்துக்கு இயக்கம் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்க்கும் மேல்முறையீட்டு மனு மீது ஒருவாரத்தில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. ஆகையால் சசிகலா முதல்வராக பதவியேற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.