நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ள நிலை தமிழக அரசின் நிலைப்பாடு சரியா: SC
ஆக்ஸிஜன் பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் விதமாக ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனையுடன் திறக்க அனுமதி அளிக்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள உற்பத்தி கூடத்தில் நாளொன்றுக்கு 500 டன் ஆக்ஸிஜன் (Oxygen) உற்பத்தி செய்ய முடியும் என்பதால், ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஆலையை இயக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தது.இந்த மனு மீதான விசாரணையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் விதமாக ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனையுடன் திறக்க அனுமதி அளிக்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துசார் மேத்தா ஆக்ஸிஜன் மட்டும் உற்பத்தி செய்ய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம் எனவும் நாட்டில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளதால், ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி தரலாம் எனவும் குறிப்பிட்டார். அதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ALSO READ | ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு
இந்நிலையில், இன்றைய விசாரணையில், ஆலையை திறப்பதில் சட்ட ஒழுங்கு பிரச்சனை இருப்பதால், ஆலையை இயங்க அனுமதிக்க கூடாது என தமிழக அரசு வாதிட்டது. அதற்கு, சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும், என்றால் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை அரசே ஏற்று நடத்தலாமே என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.
அரசே ஏற்று நடத்தினாலும் தூத்துக்குடியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும், 2018 ஆம் ஆண்டை போல் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்த விரும்பவில்லை என தமிழக அரசு பதிலளித்த நிலையில், அதிகாரமிருந்தால், தேசிய பேரிடம் மேலாண்டமை சட்டம் மூலம் மத்திய அரசே ஸ்டெர்லைட் ஆலையை ஏற்று நடத்தலாமே என தமிழக அரசு கூறியது.
மக்கள் கொத்து கொத்தாக சாகும் போதும், ஆக்ஸிஜன் ஆலையை திறக்க முடியாது என கூறுவது சரியா என தமிழக அரசிடம் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனக் கூறி வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.
ALSO READ | தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது: பொதுமக்கள் கோரிக்கை
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR