ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது- சுப்ரீம் கோர்ட்
ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையோடு நடத்தப்படும்.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் விழாவின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என சுப்ரீம் கோர்ட் அதிரடியாக தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு முன்பு தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற தமிழக வழக்கறிஞர்களின் கோரிக்கைய நிராகரித்த சுப்ரீம் கோர்ட், தற்போதுதான் தீர்ப்பு எழுதப்பட்டு வருவதால் பொங்கலுக்கு முன்பு தீர்ப்பு வழங்குவது சாத்தியமில்லை என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.