இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்!
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை அடுத்து நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை அடுத்து நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த ஜூலை 27-ம் நாள் நள்ளிரவில் உடல்நிலை கோளாறு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை 6.10 மணியளவில் கலைஞர் காலமானார்.
இதைத்தொடர்ந்து ராஜாஜி அரங்கில் முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய நிலையில், நேற்று மாலை சுமார் 4 மணியளவில் கருணாநிதி உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் அரசு மரியாதையுடன் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை அடுத்து நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும் பெட்ரோல் பங்குகள் உள்பட அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் நேற்று மூடப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் பெட்ரோல் பங்குகள் உள்பட அனைத்து நிறுவனங்களும் காலை முதலே இயங்க தொடங்கியுள்ளதால் மீண்டும் இயல்புநிலை திரும்பியுள்ளது.
மேலும் கருணாநிதி மறைவு காரணமாக தமிழக அரசு சார்பில் ஒரு வாரம் துக்கம் கடைபிடிக்கப்படுவதால் வரும் 14-ம் தேதி வரை எந்த ஒரு அரசு நிகழ்ச்சிகளும், கொண்டாட்டங்களும் நடத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.