பள்ளி மாணவி கடத்தல் - 10 நாட்களாகியும் மாணவியை கண்டுபிடிப்பதில் சிக்கல்
கடந்த பத்து நாட்களுக்கு முன்பு பள்ளி பேருந்து ஓட்டுநரின் நண்பரால் கடத்தப்பட்டதாக சொல்லப்படும் மாணவியை கண்டுபிடிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த பாப்பம் பாடியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி, கடந்த 21 தேதியன்று காலை பள்ளி வாகனத்தில் ஏறி பள்ளிக்கு சென்றார். போகும் போது நடுவழியில் மாணவியை வாகன ஓட்டுநர் கார்த்திக் பாதியில் இறக்கி விட்டதாகவும், ஓட்டுநரின் நண்பர் அஜித் என்பவர், மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அவருடைய இருசக்கர வாகனத்தில் கடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. பின்னர், மாணவி பள்ளிக்கு வராததால் பள்ளியிலிருந்து தொலைப்பேசி மூலம் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பதற்றமடைந்த பெற்றோர்கள் காலையில்தான் பள்ளி வாகனத்தில் எனது மகள் பள்ளிக்கு வந்ததாக கூறியுள்ளனர். பின்பு ஒரு மணி அளவில் மாணவி பள்ளியில் இருப்பதாக பள்ளி நிர்வாகம் பொய்யான தகவலை தெரிவித்தது. இதனை நம்பியிருந்த பெற்றோர்கள் இரவு 8 மணி வரை காத்திருந்தும் தனது மகள் வீட்டிற்கு வராததால் பள்ளி நிர்வாகத்திடம் தகவல் கேட்கும்போது முரண்பாடாக பதில் கூறியதால், அரூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஓட்டுநர் கார்த்திக்கிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் கார்த்திக்கிடம் எந்த தகவலும் காவல்துறையினரால் பெற முடியவில்லை. 10 நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்ட மாணவியை கண்டுபிடிப்பதில் காவல் துறையினருக்கு தொய்வு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தண்டனை வழங்கிய பெண் உயர் அதிகாரிக்கு அரிவாள் வெட்டு - இளநிலை உதவியாளர் கைது
அரூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் இதுபோன்று சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே பள்ளி மாணவிகள் மீது மாவட்ட நிர்வாகம் தனி அக்கறை கொண்டு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க | தமிழகத்தில் தயாராகி ராணுவம் செல்லும் துப்பாக்கிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR