4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!!
தமிழகத்தில் வளி மண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த வாரம் முதலே கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறியிருந்தார்.
சென்னையின் பல பகுதிகளில் விடாமல் அதிகாலை முதல் மழை பெய்கிறது. பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தொடரும் மழையால் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 தினங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவும் மழை நீடித்ததால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு 5வது நாளாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது