TN Schools: வரும் 25ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை
தமிழகத்தில் வரும் 25ம் தேதி முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது.
தற்போது ஒமிக்ரான் வைரல் பரவல் அதிகரித்துள்ள போதிலும், ஒமிக்ரான் வைரஸால் தமிழக பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு இல்லை. இருப்பினும், அடுத்த கட்டமாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு முதல்வர் அறிவிப்பார் என நெல்லையில் பள்ளி கல்வித் துறை மண்டல ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னதாக தெரிவித்தார்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெல்லை, தூத்துக்குடி ,கன்னியாகுமரி, விருதுநகர், மற்றும் தென்காசி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளிகளில் கடைபிடிக்கும் விதிமுறைகள், மோசமான நிலையில் இருக்கும் பள்ளி கட்டடங்கள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி நெல்லை மாவட்டத்தில் நடந்த விபத்து துரதஷ்டவசமானது , இது போன்று இனி நடக்காத வண்ணம் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளின் தரம் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியரிடம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிக்கை கொடுத்து வருகின்றனர்.
ALSO READ | தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று: சுகாதாரத்துறை
அதன் அடிப்படையில் கட்டிடங்களில் இடிக்கும் பணி நடந்து வருகிறது மோசமான கட்டிடங்களை முழுமையாக இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா காலத்திற்கு பின் பள்ளிகள் செப்டம்பர் மாதத்தில் திறக்கப்பட்டது அதற்கு முந்தைய ஆகஸ்ட் மாதத்திலிருந்து பள்ளிகளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
ஐந்து மாதத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் குறித்த ஆய்வறிக்கை பள்ளி கல்வித்துறை மூலம் பெறப்பட்டு வருகிறது பள்ளிகளில் நடக்கும் பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு கூடங்களில் தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டுபட்டு வருகிறது. மோசமான நிலையில் இருக்கும் கட்டிடங்கள் கண்டறியப்பட்டு இடிக்கப்படும் அந்த பள்ளி மாணவர்களை அருகில் இருக்கும் பள்ளிகள் உடன் இணைத்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் இல்லை என்றால் தனியார் கட்டிடங்களை வாடகைக்கு எடுத்து பள்ளி செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் 25-ஆம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் நடைபெறாமல் இருப்பதற்கு 13 ஆயிரம் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதே காரணம். பள்ளி கல்வி துறை ஆணையர் தலைமையில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் நியமனத்தில் உள்ள பிரச்சனைகள் படிப்படியாக சரி செய்யப்பட்டு விரைவில் பணி நியமனம் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு பணி நிறைவு பெற்றவர்களுக்கு தமிழக அரசின் நிதி நிலை சரியான பிறகு தேவைக்கேற்ப பணி நியமன ஆணை படிப்படியாக வழங்கப்படும்.
ALSO READ | Omicron: தில்லியில் கிரிஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுபாடுகள்..!!
நெல்லை மாவட்டத்தில் பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளனர் மாணவர்கள் குடும்பத்தின் தரப்பில் அரசு வேலை வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்தை எங்கள் குடும்பத்தின் உறுப்பினராக நாங்கள் பார்த்துக் கொள்வோம் அவர்களை கைவிட மாட்டோம். ஒமிக்கிரான் பரவலால் தற்போது மிகப்பெரிய பாதிப்பில்லை.
ஒமிக்கிரான் பரவலால் பள்ளிகளில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்துவநிபுனர்களுடன் செய்யப்படும் ஆலோசனைக்கு பிறகு பள்ளிகளில் எடுக்கபடும் நடவடிக்கை குறித்து முதல்வர் அறிவிப்பார். பள்ளி கல்வித் துறைக்கு போட்டியாக முதல்வரை இலக்காக கொண்டு செயல்படுகிறோம். பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள் என தெரிவித்தார்.
ALSO READ | இந்தியாவில் 200ஐ தாண்டிய Omicron பாதிப்பு; அமலாகப்போகிறது Night Curfew
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR