காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் தண்ணீர் பஞ்சம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னை நகரவாசிகள் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை நகரம் கிட்டத்தட்ட 200 நாட்கள் வானம் பார்த்த பூமியாக இருப்பதாலும், வெயில் சுட்டெரிப்பதாலும் நீர் நிலைகள் வறண்டுவிட்டன. குறிப்பாக சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு போய்விட்டன. 


சென்னை முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டு நிலவி வரும் நிலையில், பல இடங்களில் உணவகங்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் முடக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தை போக்க அரசு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வளியுறுத்தி வருகின்றனர். தண்ணீர் தட்டுப்பாட்டை குறைக்க அரசும் பல முயற்சிகளை செய்து வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரத்தில் நிறுவப்பட இருக்கும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார். 


காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது திட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்ட உள்ளார். இதில் நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார். அவருடன் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். சுமார் 6000 கோடி ரூபாய் செலவில் தொடங்கும் இந்த திட்டமானது, சென்னை பெருநகர் குடிநீர் விநியோக வாரியத்தின் மூலம் தொடங்கப்படுகிறது.