ராகுல் காந்தி நடப்பதால் என்ன நடக்கும்?... சீமான் கேள்வி
ராகுல் காந்தி நடைபயணத்தால் என்ன நடந்துவிட போகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
மகாகவி பாரதியாரின் நினைவுநாளையொட்டியும், இம்மானுவேல் சேகர்ன் நினைவுநாளையொட்டியும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ் தேசிய இன மக்கள் எழுச்சியுற்று, தமிழ் தேசிய அரசியல் இதுவரை இந்த நிலத்தில், எங்களுடைய தாத்தாக்கள் மா.பொ.சி., சி.பா.ஆதித்தனார், பெருஞ்சித்திரனார், கி.ஆ.வெ.விசுவநாதம், அண்ணல் தங்கம், மறைமலை அடிகள், இவர்கள் எல்லாம் முன்னெடுத்ததைத் தாண்டி, இந்த தலைமுறை பிள்ளைகள், குறிப்பாக பிரபாகரன் பிள்ளைகள் அரசியல் களத்திற்கு வந்த பிறகு, பேரெழுச்சியாக பெரும் வளர்ச்சியாக வளர்ந்து வருகிறது.
அதற்காகத்தான், இதுவரை இல்லாத வகையில், திரும்ப திரும்ப திராவிடம், திராவிட மாடல் என்று பேசுகிறார்கள். அதற்கு காரணம் நாங்கள்தான். இதனால் நாங்கள் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறோம். எனவே திராவிட மாடல் புத்தகம் வந்தால் நானும் வாங்கிப் படிக்க ஆர்வமாக இருக்கிறேன்.
மோடியை எதிர்க்கும் வலுவான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் எங்கே இருக்கிறது? சொந்த தொகுதியில் நின்று அவரால் வெல்ல முடியவில்லை. தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் தோளில் ஏறிக்கொண்டு அவர்கள் தயவில் வாக்குக்கு பணம் கொடுத்து வென்று இங்கு இருக்கின்றனரே தவிர, வேறு எங்கு இருக்கின்றனர். காங்கிரஸ் எதிர்க்கட்சியாக எங்கு இருக்கிறது.
எதிர்க்கட்சி என்பது, எத்தனை இடங்கள் வென்று உள்ளே சென்று இருக்கிறோம் என்பது அல்ல. என்னவாக இயங்குகிறோம் என்பதுதான். அவர்கள் இயங்குவதுபோல் தெரியவில்லையே. ராகுல் காந்தி நடக்கிறார், அதனால் என்ன நடக்கும்? 50 ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்டு கொண்டுவர முடியாத மாற்றத்தை 5 மாதம் நடந்து கொண்டு வந்துவிடுவாரா? என கேள்வி எழுப்பினார்.
மேலும் படிக்க | மு.க. ஸ்டாலின் வாழ்க - பாரதியார் நினைவு நாளில் இளையராஜா புகழாரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ