'ஜெய் பீம்' படம் ரிலீஸ் ஆனதிலிருந்தே இப்படத்திற்கு ஆதரவும் ,எதிர்ப்பும் பெருகி வருகிறது.  போலீசாரின் கொடூர புத்தியை, இப்படம் எவ்வித பாரபட்சமுமின்றி தெளிவாக எடுத்துக்காட்டியது. இருளர் இனமக்களின் வாழ்க்கையில் இன்றளவும் ஏற்படும் இன்னல்களை துணிச்சலுடன் இப்படம் காட்டியது.  ஆரம்பத்தில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும் தற்போது படம் பல சர்ச்சைகளுக்கும் சிக்கி கிடக்கிறது.  அதிலும் குறிப்பாக கடந்த சில தினங்களாக படத்திற்கு கடுமையான எதிர்ப்பு வலுத்துக்கொண்டே போகின்றது.  இந்த பிரச்சனை ஒரு படி மேலே போய் சூர்யாவை அடித்தால் 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கும் அளவிற்கு விவகாரம் எல்லை மீறிவிட்டது .


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ சூர்யாவுக்கு எதிராக வன்முறை பேச்சு - பாமக மாவட்ட செயலாளர் மீது பாய்ந்தது வழக்கு


பல திரைபிரபலங்கள், அரசியல்வாதிகள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினராலும் இப்படம் ஈர்க்கப்பட்டு கொண்டாடப்பட்டு வந்தாலும், படத்திற்கு ஒரு பெரிய கரும்புள்ளியாய் இந்த காலண்டர் விவகாரம் அமைந்துவிட்டது.  இதனால் தான் இப்படம் பெரியளவில் பிரச்சனையினை எதிர்கொண்டு இருக்கிறது.  அக்னி கலசம் என்பது பொதுவாக வன்னியர்களை குறிக்கும் முத்திரை.  இந்த அக்னி கலசம் முத்திரை கொண்ட காலண்டர் அந்த போலிஸாரின் வீட்டில் இருந்தது பாமகவினரை கொந்தளிக்க செய்தது.



இதற்கு முக்கிய உண்மையான கதையை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது என்று கூறிவிட்டு , போலீசின் உண்மையான பெயரை மாற்றி குரு என்று வைத்தும், அவர் வீட்டில் காலண்டரை வைத்து வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பது போல சித்தரித்ததால் தான் இவ்வளவு பிரச்சனை. இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் சூர்யாவிற்கு கடிதம் எழுதினார், அதற்கு சூர்யாவும் பதில் கடிதம் எழுதினார் .


பிரச்னையை தொடர்ந்து படக்குழு காலண்டரில் இருந்த அந்த முத்திரையை நீக்கியது.  இருப்பினும் இந்த பிரச்சனை இன்றளவும் எரிந்து கொண்டு தான் இருக்கின்றது.  சூர்யாவின் வீட்டிற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  இந்நிலையில் நாம் கட்சி தலைவர் சீமான் கருத்து ஒன்றை  வெளியிட்டுள்ளார் .  அதாவது 'அக்னி கலசம்' என்பது வன்னியர்களுக்கு உரியது என்று உலகிற்கே தெரியும்.  அப்படி இருக்கையில் அந்த முத்திரையை ஏன் 'ஜெய் பீம்' படத்தில் பயன்படுத்த வேண்டும?  அந்த முத்திரையை படத்தில் வைக்காமல் தவிர்த்திருக்கலாம்.  அன்புமணி சூர்யாவிற்கு எழுதிய கடிதத்தில் இருக்கும் வலி, உண்மைத் தன்மையை மறுக்க முடியாது.  சூர்யாவை உதைத்தால் 1 லட்சம் என்று  சொன்னவரை எட்டி உதையுங்கள் நான் 1 லட்சம் தருகிறேன் என்று சீமான் கூறியுள்ளார்.


ALSO READ மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: சீமான்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR