ஆகம விதியை மீறும் அண்ணாமலை - சேகர்பாபு தடாலடி
ஆகம விதி குறித்து தொடர்ந்து பேசி வரும் அண்ணாமலை, அதை பின்பற்றாமல் அவரே ஆகமத்தை மீறி செயல்படுகிறார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் விழா ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று (டிச. 29) நடைபெற்றது. மாநகராட்சி,குடிநீர் வழங்கல் வாரியம், காவல்துறை, தீயணைப்பு துறை ஆகிய துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர், அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"ஏகாதேசி பெருவிழா நடைபெறுவதையோட்டி முறையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கிறது.
கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கு முறையான வசதி, மருத்துவ முகாம்கள், பக்தர்களுக்கு குடிநீர் வசதி போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரமபத வாசல் திறக்கும் நேரத்தில் வாசலுக்கு அருகே அருகே 500 காவல் துறை அதிகாரிகள் காலை 6 மணி முதல் 7 மணி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
மேலும் படிக்க | திருப்பதி; வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைன் விற்பனை தொடக்கம்
காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை மேலும் 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்கள் மூன்றாவது கட்டமாக மதியம் 2 மணி முதல் மாலை 7 மணி வரை அடுத்த 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மொத்தமாக 1500 காவலர்கள் மூன்று சுற்றுகளாக பாதுகாப்பணியில் ஈடுபடுபவர்கள்.
ஏகாதசி தினத்தன்று தீயணைப்புத்துறையினர் வாகனங்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். பக்தர்கள் அனைவரும் காவல் துறைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து செயல்பட வேண்டும்" என அமைச்சர் வேண்டுகோளும் வைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,"ஏகாதேசி தினமன்று 150 தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து சுத்தப்படுத்தும் வேலையில் இருப்பார்கள். அன்று வரக்கூடிய பக்தர்களுக்கு கோவில் பிரசாதமாக லட்டு வழங்கப்படும்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகம விதி என தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால், அண்ணாமலை ஆகம விதியை மீறி செயல்படுகிறார்.
கோவில்களில் ஜாதி மத வேறுபாடு இன்றி அனைவரையும் சமமாக பார்க்கப்படும். ஒருவேளை ஜாதிகள் பார்ப்பதாக குற்றச்சாட்டு வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
மேலும் படிக்க | அண்ணாமலை தலைமையில் பெண்கள் படும் பாடு - போர்க்கொடி தூக்கும் காய்த்ரி ரகுராம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ