மேகதாது விவகாரம்: கர்நாடக துணை முதலமைச்சருக்கு வாய்க்கொழுப்பு - செல்லூர் ராஜ் விளாசல்
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா துணை முதல்வர் வாய்க்கொழுப்போடு பேசி வருகிறார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோவில் நோக்கி செல்லக்கூடிய பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழாவில் முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு துவக்கி வைத்தார். மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் கருப்பசாமி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பக்தர்களுக்கு கேசரி, சுண்டல், புளியோதரை ,லெமன் சாதம், தேங்காய் சாதம். வெஜிடபிள் ரைஸ். சாம்பார் சாதம், நீர்மோர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. அப்போது பேசிய செல்லூர் ராஜூ, அனைத்து மதத்தினரும் ஒன்றாக இருக்கக்கூடிய ஒருங்கிணைந்த அதிமுக தான் இருக்கிறது.
மேலும் படிக்க | வெற்றியும், தோல்வியும் தற்காலிகமானதே: பி.டி.ஆர்
மேகதாது அனை விவகாரத்தில் கர்நாடக அரசு எடுக்கும் முயற்சி கண்டனத்திற்குரியது. கர்நாடக துணை முதல்வர் வாய்க்கொழுப்புடன் பேசி வருகிறார். அணை கட்டுவது குறித்து டி கே சிவக்குமார் பேசி உள்ளது கண்டிக்கத்தக்கது. தமிழக மக்களுக்கு திமுக அரசு மேகதாது அணை விவகாரத்தில் தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. அதன் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து இதனை செய்கிறது. தமிழக முதல்வர் சுற்றுப்பயணம் என்னவென்று தெரியாமலே வெளிநாடு சென்று திரும்பியுள்ளார். 8000 கோடி முதலீடு செய்வார்கள் என எதிர்பார்த்தோம்.
ஆனால், 3000 கோடி தான் கொண்டு வந்துள்ளார் என்கின்றார்கள். ஆனால் உண்மை நிலை என்னவென்று எங்களுக்கு தெரியும். பெருமளவிலான முதலீட்டை அவர் தமிழகத்திற்கு கொண்டு வரவில்லை. கடந்த ஆட்சி காலத்தில் எங்களது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பல்லாயிரம் கோடி முதலீட்டை தமிழகத்துக்கு இழுத்து வந்தார். வெளிநாடு பயணம் குறித்து வெள்ள அறிக்கை கூட வெளியிட்டார். தமிழக முதல்வர் அவர்களுடைய வெளிநாட்டு பயணம் வெத்து பயணம் என சாடினார்.
மேலும் படிக்க | கோடிக்கணக்கில் உயிரிழப்பு... இருந்தாலும் கோடியில் புரளும் சிகரெட் கம்பெனிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ