ராமநாதபுர மாவட்ட காவல்துறை மீது செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு
Selvaperunthagai : இமானுவேல் சேகரன் குருபூஜை விழாவுக்கு சென்ற தலைவர்களுக்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு கொடுக்கவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
Selvaperunthagai, Ramanathapuram Police : ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட தியாகி இமானுவேல் சேகரனின் 67வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரடியாக சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதேபோல், அதிமுக, காங்கிரஸ் தலைவர்களும் இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தலைவர்கள் வருகையையொட்டி அப்பகுதியில் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, காவல்துறை கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையின் செயல்பாடுகள் அதிருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் படிக்க | மதுவால் இத்தனை விஷயங்களில் தமிழ்நாடு முதல் இடத்தை பிடித்துள்ளது - அன்புமணி ராமதாஸ்!
செல்வபெருந்தகை குற்றச்சாட்டு
இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்ற காங்கிரஸ் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கவில்லை என குற்றம்சாட்டிய அவர், காங்கிரஸ் கட்சியினர் கட்டுக்கோப்பாக நடந்து கொண்டதால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவ்வித்தார். மேலும், தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் மரியாதை காவல்துறை சார்பில் கொடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டிய செல்வப்பெருந்தகை, ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையின் செயல்பாடுகள் தங்களுக்கு அதிருப்தி அளிப்பதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்று நடந்து கொள்ளக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.
ராமநாதபுரம் காவல்துறை மீது அதிருப்தி
இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு இந்த குற்றச்சாட்டையும் அதிருப்தியையும் அவர் வெளிபடுத்தினார். செய்தியாளர்களிடத்தில் செல்வப்பெருந்தகை பேசும்போது, " இமானுவேல் சேகரனார் குருபூஜைக்கு வரும் தலைவர்களுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை. மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் எங்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் காவல்துறை எங்களுக்கு சிறப்பாக பாதுகாப்பு கொடுத்தது. ஆனால் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை எங்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கவில்லை.
காவல்துறையின் மெத்தனம் ஏன்
இது வருத்தத்துக்குரியது. ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை ஏன் இவ்வளவு மெத்தமான இருக்கிறது?. பாதுகாப்பு பணியில் இருக்கும் காவல்துறையினரும் அலட்சியமாக இருந்தனர். எனக்கே யாரும் பாதுகாப்பு கொடுக்கவில்லை. இதேபோல் மற்ற தலைவர்களையும் ஆங்காங்கே நிற்க வைக்கின்றனர், சிறைபிடிப்பதுபோல் செயல்படுகின்றனர். இது வருத்ததுக்குரியது, வேதனைக்குரியது. இனி வரும் காலங்களில் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இப்படி செயல்படக்கூடாது" என்று கூறினார்.
மேலும் படிக்க | 'விஜய்யை பார்த்ததும் சரியான மூளை சிக்கல்' யார் இந்த கேரள சிறுவன் ரிஷான்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ