தன்னுடன் குடும்பம் நடத்திய முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நாடோடிகள் திரைப்பட நடிகை சாந்தினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மலேசிய நாட்டை பூர்வீகமாக கொண்டவர் நடிகை சாந்தினி. இவர் சென்னை (Chennai) பெசன்ட் நகரில் வசித்து வருகிறார். 36 வயதான இவர் நாடோடிகள் உட்பட 5 தமிழ் திரைப்படங்களில் (Tamil Cinema) நடித்துள்ளார். மலேசிய சுற்றுலா துறையிலும் நடிகை சாந்தினி பணிபுரிந்து வருகிறார். அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் (Manikandan) மற்றும் சாந்தினி இருவரும் 5 ஆண்டுகள் நெருங்கி பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. 


இந்த நிலையில், நடிகை சாந்தினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை காதலிப்பதாகக் கூறி 5 ஆண்டுகளாக தன்னுடன் வாழ்ந்து வந்ததாகவும், தற்போது திருமணம் செய்ய மறுப்பு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் பல முறை உடலுறவில் ஈடுபட்டு 3 முறை கர்ப்பமாகி கருவை கலைத்தாகவும் சாந்தினி கூறியுள்ளார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.


இந்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னாள் அமைச்சரை அழைத்து காவல்துறையினர் விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR