சென்னையில் தொடர்ச்சியாக பள்ளிகளில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே கேகே நகர் பள்ளியில் ஆசிரியரான ராஜகோபாலன் தொடர்ச்சியாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதன் வரிசையில் மஹரிஷி வித்யாமந்திர், செயின்ட் ஜார்ஜ் பள்ளி மீதான புகார்களும் கொடுக்கப்பட்டு அவைகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தற்போது சென்னை (Chennai) எம்ஆர்சி நகரில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியிலும் கடந்த பல ஆண்டுகளாக மாணவிகள் இதுபோன்று பாலியல் (Sexual Harassment) துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து ஒரு புகார் கூட இதுவரை விசாரிக்கப்படவில்லை என்றும் முன்னாள் மாணவர்கள் 900க்கும் மேற்பட்டோர் புகாராக கையெழுத்திட்டு மாநில குழந்தைகள் நல உரிமைகள் மற்றும் பாதுகாப்பு மையத்திற்கு புகாராக அளித்துள்ளனர்.  


ALSO READ: பாலியல் புகார்: மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்


தற்போது இந்த மாணவர்களின் புகாரின் அடிப்படையில் வரும் 8ம் தேதி அந்த பள்ளியில் பணியாற்றக்கூடிய அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரடியாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து புகார்கள் அளித்தும் பள்ளி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மாணவிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. 


அந்தவகையில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னாள் மாணவர்கள் 900 பேர் கூட்டாக புகார் அளித்துள்ளனர். மேலும் முன்னாள் மாணவர்கள் கையெழுத்திட்டு புகாராக மாநில குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையத்திற்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் அனுப்பியுள்ளனர்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR