தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் பதவியேற்பு!
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் பதவியேற்றார். அவர் தமிழகத்தின் 46-வது தலைமைச் செயலாளர் ஆவார்!
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் பதவியேற்றார். அவர் தமிழகத்தின் 46-வது தலைமைச் செயலாளர் ஆவார்!
முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஓய்வு பெற்றதை தொடர்ந்து புதிய தலைமைச் செயலாளராக, சண்முகம் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன், 60 வயதை எட்டியதன் காரணமாக பணியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், புதிய தலைமைச் செயலாளராக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் நியமிக்கப்பட்டார்.
கடந்த 1985-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு IAS அதிகாரியான க.சண்முகம், சேலம் மாவட்டம் வாழப்பாடிக்கு அருகிலுள்ள கிராமத்தில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் 1960-ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி பிறந்தார்.
வேளாண்மைத் துறையில் இளங்கலை பட்டமும், வேளாண் பொருளியல் துறையில் முதுகலை பட்டமும் படித்துள்ளார். வேளாண்மைத் துறை மீது அவர் எப்போதும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பதாக அவரிடம் பணியாற்றிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1985-ஆம் ஆண்டில் IAS தேர்ச்சி பெற்ற பிறகு, உதவி ஆட்சியராக தஞ்சாவூரிலும், திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியிலும் பணியாற்றினார்.
ஆட்சியர்-துறை செயலாளர் பணிகள்: உதவி ஆட்சியர் பணியைத் தொடர்ந்து, வேளாண்மை, நிதி, பொதுப்பணி உள்ளிட்ட துறைகளில் சார்புச் செயலாளராகவும், துணைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.