ஆஹோ... ஷர்மிளாவுக்கு குவியும் வேலைவாய்ப்புகள்... ஆதரவு கரம் நீட்டும் கனிமொழி!
Woman Bus Driver Sharmila: கோவை பெண் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளா இன்று திடீரென தனது வேலையை இழந்த நிலையில், அவருக்கு தற்போது பல டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களிடம் இருந்து வாய்ப்புகள் குவிக்கிறது.
Woman Bus Driver Sharmila: கோவை வடவள்ளியைச் சேர்ந்த ஷர்மிளா, தனியார் பேருந்து ஓட்டுநராக பணியாற்றினார். இவர் கோவை காந்திபுரத்தில் இருந்து சோமனூர் வரை செல்லும் வி.வி என்ற தனியார் பேருந்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், இவர் சமூக வலைதளங்களில் பிரபலமானார். பலரும் அவருக்கு ஊக்கமளித்து வந்தனர்.
பேருந்தில் கனிமொழி பயணம்
அந்த வகையில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஷர்மிளா ஓட்டும் பேருந்தில் இன்று காலை காந்திபுரத்தில் இருந்து ஹோப்ஸ் வரை பயணம் மேற்கொண்டார். கனிமொழி பயணத்தின் போது அந்த பேருந்தில் பணியாற்றி வரும் பெண் பயிற்சி நடத்துனர் கனிமொழியிடம் பேருந்து பயணத்திற்கான பயண சீட்டு எடுக்கும்படி கேட்டுள்ளார். இதற்கு, கனிமொழி சிரித்துக்கொண்டே, தனது உதவியாளர் மூலம் டிக்கெட் எடுத்துள்ளார். பின்னர், கனிமொழி ஹோப்ஸ் பகுதியில் இறங்கி ஷர்மிளாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சென்றுவிட்டார்.
பணிநீக்கமா... பணி விலகலா...?
தொடர்ந்து, கனிமொழியிடம் டிக்கெட் கேட்டது குறித்து பெண் பயிற்சி நடத்துநர் அன்னதாயிடம், ஷர்மிளா கடுமையான வாக்குவாதம் செய்துள்ளார். இதையடுத்து, பேருந்தை காந்திபுரம் பேருந்தில் நிலையத்தில் நிறுத்திவிட்டு, பேருந்து அலுவலகத்திற்கு சென்று உரிமையாளர் துரைகண்ணுவிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளார்.
மேலும் படிக்க | கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணிநீக்கம் - உண்மை என்ன?
தொடர்ந்து, கனிமொழியை அவமரியாதை செய்யும் வகையில் நடந்துநர் நடந்துகொண்டதாகவும், இதுகுறித்து முறையிட்டதற்கு தன்னை பணியில் இருந்து நீக்கிவிட்டதாக ஓட்டுநர் ஷர்மிளா கூறினார். தொடர்ந்து, தாங்கள் அவரை பணியில் இருந்து நீக்கவில்லை என்றும் அவராக தான் பணியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார் என பேருந்து உரிமையாளர் துரைகண்ணு பதிலளித்தார்.
விளம்பரம் என குற்றச்சாட்டு
மேலும், கனிமொழியிடம் டிக்கெட் கேட்டு, தனது கடமையையே செய்ததாக நடத்துநர் அன்னதாய் தெரிவித்த நிலையில், இதுகுறித்து தான் ஷர்மிளாவிடம் மன்னிப்பு கேட்டதாகவும், அவர் அதனை ஒப்புகொள்ளவில்லை எனவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி ஷர்மிளா ஓட்டும் பேருந்தில் மற்றொரு பெண்ணை நடத்துநராக வைத்தால், தனக்கான விளம்பரம் குறைந்துவிடும் என ஷர்மிளா தன்னிடம் கூறியதாக பேருந்து மேலாளர் ரகு குற்றஞ்சாட்டியுள்ளார்.
உதவிக்கரம் நீட்டிய கனிமொழி
இந்த பிரச்னையில் தான் நடுத்தெருவில் நிற்பதாகவும், அடுத்த என்ன செய்வது என தெரியவில்லை எனவும் ஓட்டுநர் ஷர்மிளா கவலை தெரிவித்திருந்தார். அந்த வகையில், இந்த தகவல் அறிந்த கனிமொழி எம்.பி அவர்கள் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வேறு வேலை மற்றும் தேவையான உதவிகளை அளிப்பதாக உறுதியளித்துள்ளார்.
குவியும் வாய்ப்புகள்
இந்நிலையில், ஷர்மிளாவிற்கு பல தனியார் பேருந்துகளில் இருந்தும் வேலை அளிக்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு மீண்டும் பேருந்து ஓட்டுவதற்கு வாய்ப்பளிக்க மற்றொரு தனியார் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் முன் வந்துள்ளார்.
சூலூரை சேர்ந்த கிருஷ்ணா டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் முருகேசன் இது குறித்து செய்தியாளரிடம் பேசிய, "எப்போது வேண்டுமானாலும் இடையர்பாளையத்தில் இருந்து உக்கடம் நோக்கி செல்லும் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிய வாய்ப்பு கொடுக்கிறோம். எப்போது வேண்டுமானாலும் வேலையில் சேர்ந்து கொள்ளலாம். அவிநாசி ரோடு இல்லை என்றால் என்ன? திருச்சி ரோட்டில் சர்மிளா பேருந்து ஓட்டலாம்" என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | போதை மாநிலமாக மாறும் தமிழ்நாடு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ