Elephant Attack Video: கேரள மாநிலத்தில் 10க்கும் மேற்பட்டோரை கொலை செய்து, மூணாறு பகுதியில் அட்டகாசம் செய்துவந்த அரிசி கொம்பன் என்ற ஒற்றை காட்டு யானையை கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி கும்கி யானையின் உதவியுடன் பிடித்தனர். இந்த யானையை அரி கொம்பன் என்றும் கேரள பகுதியில் அழைக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக வனப்பகுதியில்...


யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க யானையின் கழுத்தில் ஜி.பி.ஆர்.எஸ் கருவி பொருத்தி தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள பெரியார் புலிகள் வன சரணாலயத்தில் கொண்டு வந்துவிட்டனர். அங்கிருந்து தமிழக வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்த அரிசி கொம்பன் யான, தேனி மாவட்டம் ஹவேவிஸ் மேகமலை பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களை அச்சுறுத்தி வந்தது.


தொடர் கண்காணிப்பு 


இந்நிலையில், நேற்றிரவு ரோஜா பூ கண்டம் வழியாக லோயர் கேம்ப் பகுதிக்கு இடம் பெயர்ந்த யானை, கூடலூர் அருகே கழுதை மேட்டுப்பகுதியில் உள்ள தனியார் தென்னந்தோப்பில் புகுந்து விவசாய பயிர்களை அழித்து அங்கேயே தஞ்சம் அடைந்து நின்றுள்ளது.


மேலும் படிக்க | ஓசூர் பகுதியில் ஒற்றை யானை அட்டகாசம்


இதனைப் பார்த்த அப்பகுதி விவசாயிகள் வனத்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  தகவலை அறிந்து விரைந்து வந்த தமிழக மற்றும் கேரளா வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் அப்போதைக்கு பொதுமக்களையும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களையும் வேறெங்கும் செல்ல விடாமல், அங்கு பணியில் இருந்த பணியாளர்களை வெளியேற்றி யானையின் செயல்பாட்டினை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.


பரபரப்பு காட்சிகள் வெளியீடு


விளை நிலங்களுக்குள் புகுந்த அரிசி கொம்பன் யானை அங்கேயே நின்றிருப்பது விவசாயிகளிடம் பெரிதும் அச்சத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், இன்று காலையில் கம்பம் நகருக்குள் புகுந்த அரிசி கொம்பன் யானை கம்பம் கூலத்தேவர் தெருவில் புகுந்து பொதுமக்களை விரட்டியது.