கரூரில் மகன், மகளுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை!
கரூரில் தாய், மகள், மகன் மூன்று பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கெந்தப் பொடிக்கார தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் நிசாந்தி தம்பதிகள். இவர்களுக்கு 4 வயது மகளும் 2 வயதில் மகனும் உள்ளனர். இந்நிலையில் மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். குழந்தைக்கு மூச்சு திணறல் இருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக பெற்றோர்கள் மனமுடைந்து உள்ளனர். இந்த நிலையில், இன்று காலை நிஷாந்தியின் கணவர் வெங்கடேசன் அவரது சகோதரர் குமார் ஆகிய இருவரும் ஈரோடு மாவட்டம், அரச்சலூரில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு செல்வதற்கு தயாரானார்கள். அப்போது நிஷாந்தனி மற்றும் அவரது குழந்தைகள் மூன்று பேரும் கோவிலுக்கு வரவில்லை எனவும் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணம் காட்டி வீட்டில் இருந்துள்ளார். கூட்டு குடும்பமாக இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்கள் கோயிலுக்கு சென்ற பிறகு இன்று மாலை 4 மணியளவில் நிஷாந்தி தனது மகன் மற்றும் மகள் ஆகிய இருவரையும் தனது சேலையில் தூக்கிட்டு தொங்க வைத்து, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோயிலுக்கு சென்று விட்டு வீடு திரும்புவதற்கு முன்பாக அக்கம் பக்கத்தினர் வெகு நேரம் கதவு சாத்தப்பட்டு இருப்பது கண்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இவர்கள் தூக்கில் கொண்டிருப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது தொடர்பாக வெங்கடேஷ் மற்றும் குமார் ஆகியோருக்கு தகவல் அளித்தனர். தகவல் கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்தனர்.
மேலும் படிக்க | ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பேனர் சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி; பலர் காயம்
இந்த சம்பவம் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த நிஷாந்தி மற்றும் அவரது குழந்தைகள் ஆகிய மூன்று பேரின் உடல்களையும், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூரில் தாய், மகள், மகன் மூன்று பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க | நம்பியவர்களுக்கு பணம் பெற்றுத்தர தனது உயிரை மாய்த்த நிதி நிறுவன ஏஜெண்ட்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ