காதல் விவகாரத்தில் சாலையில் சண்டையிட்டு கொண்ட கல்லூரி மாணவிகளின் வீடியோ வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அண்ணா நகர் ரவுண்டானா பேருந்து நிலையத்தில் நேற்று மதியம் 2 மணியளவில் அண்ணாநகர் சுற்று வட்டாரத்தில் உள்ள கல்லூரி மாணவ/மாணவிகள் நின்றுகொண்டிருந்தனர்.


அப்பொழுது அண்ணாநகரில் இயங்கி வரும் பிரபல தனியார் கல்லூரி மாணவிகளும் அங்கு வந்தனர். அப்போது, அந்த கல்லூரி-யை சேர்ந்த மாணவி ஒருவர், அருகில் நின்று கொண்டிருந்த முதலாம் ஆண்டு கல்லூரி மாணவியிடம் தகராறில் ஈடுப்பட்டுள்ளார்.


ஒரு கட்டத்தில் இருவர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இருவரும் ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்து கொண்டு மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.


தனது காதலனுடன் ஏன் பேசுகிறாய் எனக்கேட்டு அவர்கள் இருவரும் சண்டையிட்டுக்கொண்டனர். இருவரும் கராத்தே, குஃப்பூ போன்ற மொத்த கலைகளையும் பயன்படுத்தி சண்டையிட்டு கொண்டதை அங்கிருந்தவர்கள் சிலர் தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்ததுள்ளனர்.


மேலும் படிக்க | சென்னை புறநகரில் ரேஸில் ஈடுபட்ட லாரிகள் - நடந்தது என்ன? 


அந்த வீடியோக்கள் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.



இரு மாணவிகளுக்கு இடையே காதல் பிரச்சினை விவகாரத்தால் மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அது தொடர்பாக கல்லூரி நிர்வாகமும் விசாரணை நடத்திவருவதாக கூறப்படுகிறது.


இதேபோன்ற ஒரு சம்பவத்தில், கடந்த டிசம்பர் மாதம் பள்ளி மாணவிகளிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு ஆவடி பேருந்து நிலையத்தில் அடித்துக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. தறோது இந்த வீடியோவும் பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது.


பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவியர் இதுபோன்று தாக்குதலில் ஈடுபடும் செயல் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. தேவையில்லாத சகவாசம் தான் இதற்கு காரணமா அல்லது பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பயிற்சி அளிக்கப்படாததால் இந்த நிலை ஏற்படுகிறதா என்பது பெரிய கேள்வியாக உள்ளது.


மேலும் படிக்க | Viral Video : உட்கட்சி பூசலில் பாஜக பிரமுகர் மீது பாஜகவினரே கொலைவெறி தாக்குதல்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR