கள்ளக்குறிச்சி பிளஸ் டூ மாணவி சந்தேக மரண வழக்கு தொடர்பாக தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையிலான குழுவினர் இன்று சம்பவம் கள்ளக்குறிச்சியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்தப் பள்ளியில் நடைபெற்று வந்த விடுதியானது அனுமதி பெறாமல் முறைகேடாக செயல்பட்டு வந்தது தெரிய வந்திருப்பதாக கூறியிருக்கிறார். மேலும் பள்ளி விடுதி அனுமதி பெறாமல் முறைகேடாக செயல்பட்டு வந்ததை காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் எனவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சக்தி மேல்நிலை பள்ளி விடுதி அனுமதி இன்றி இயங்கி உள்ளது. முறையாக விதிகள் கடைபிடித்திருந்தால் மாணவிக்கு பாதுகாப்பு கிடைத்திருக்கும் என மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் தான் விசாரணை ஏதும் நடத்தப்படாது எனவும் தெரிவித்திருக்கின்றார். மேலும் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் எந்த வகையில் பாதிக்கப்பட்டாலும் செக்சன் 74-ன் படி அவர்களின் அடையாளங்களை எந்த வகையிலும் வெளியிட வேண்டாம் என ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் குழந்தைகளின் முகத்தை மறைத்து தான் ஒளிபரப்ப வேண்டும் என்றும் அதே நேரத்தில் தற்போது கள்ளக்குறிச்சி மாணவி இறந்த விவகாரத்தின் போது அந்த மாணவியின் பெயரை குறிப்பிட்டு ஹாஷ்டேக் வெளியிட்டது கூட கவலை அளிப்பதாகவும் ஆணையம் தெரிவித்து இருக்கிறது.


மேலும் படிக்க: கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக வெளியான பகீர் தகவல்!


மறுபுறம் கள்ளக்குறிச்சி மாணவியின் மறு பிரேத பரிசோதனையை தங்கள் தரப்பு பரிந்துரை செய்யும் மருத்துவர் குழு கொண்டு நடத்த உத்தரவிடக் கோரி மாணவியின் தந்தை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக எதுவாக இருந்தாலும் உயர் நீதிமன்றத்தில் முறையீடுமாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. 


உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் தங்களது மகளின் உடலை இன்று பெற்றோர் பெற்றுக் கொள்ளவ்வார்கள் எனத் தெரிகிறது.


கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த வாரம் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மர்மமான முறையில் இறந்ததாக செய்திகள் வெளியானது.  பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து மாணவி குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளியின் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. தங்களது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் புகார் அளித்து இருந்தனர். இதனை தொடர்ந்து பள்ளியின் முன்பு அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டவர். இந்த போராட்டம் கலவரமாக மாறி கல்வீச்சு தாக்குதல்கள் ஏற்பட்டது. பள்ளியில் வகுப்பறைகள், பேருந்துகள் மற்றும் காவல் துறை வாகனங்கள் அனைத்தும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. 


மேலும் படிக்க: கள்ளக்குறிச்சியில் பாக்கெட் சாராயம் கொண்டு பள்ளிக்கு தீ? வெளியான அதிர்ச்சி தகவல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ