அரசு பஸ்சில் ஒருவர் சுட்டுக்கொலை!!
பயணிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
நெல்லையில் இருந்து கோவைக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. 3 பேர் ஒன்றாக பஸ் ஏறியுள்ளனர். இரண்டு பேர் விருதுநகருக்கும், ஒருவர் திருமங்கலம் செல்லவும் டிக்கெட் எடுத்துள்ளனர். பஸ் சாத்தூர் அருகே வந்த போது மூவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கியால் சுட்டவர்கள் இறங்கி தப்பி ஓடி விட்டனர். பலியானவர், கோவில்பட்டியை சேர்ந்த கருப்பசாமி(25) என தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். சம்பவத்திற்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.