காஞ்சிபுரம் மாவட்டம் தாயார் குளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா.  இவருக்கும் காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றிய, சோமு என்கின்ற சோமசுந்தரம் என்பவருக்கும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. நீண்ட நாள் உறவுக்கு பின், காவலர் சோமசுந்தரத்திற்கும் பிரியாவுக்கும் இடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் எஸ்.ஐ. சோமசுந்தரம், பிரியாவிற்கு காவல்துறையினர் மூலம் அடிக்கடி தொந்தரவு செய்துவந்ததாகவும், பிரியாவின் தம்பியை வழக்கு ஒன்றில் பிடித்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால்
 காவலர் வீட்டிற்கு சென்று பிரியா அடிக்கடி சண்டையிட்டு வந்ததாகத் தெரிகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையே, காஞ்சிபுரம் பகுதியில் காவலராக இருந்து வந்த சோமசுந்தரத்தின் மீது எழுந்த பல்வேறு புகார்களை அடுத்து காவல்துறை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு வந்ததால் அவரை, காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பெருநகர் காவல்நிலையத்திற்கு மாற்றம் செய்திருந்தனர். இருந்தும் பிரியா மற்றும் காவலர் சோமசுந்தரம் இடையேயான பிரச்சினை நீடித்து வந்தது. பிரியாவின் நடத்தை பற்றி பிரியாவின் உறவினர்களிடம் சோமசுந்தரம் தவறாகக் கூறியதாகச் சொல்லப்படுகிறது. அதைத் தட்டி கேட்கத்தான், பிரியா, அவரை தேடி காவல்நிலையத்திற்கே வந்திருக்கிறார். வந்ததும் அவர் எஸ்.ஐ சோமசுந்தரத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 


இதனால் ஆத்திரம் அடைந்த சோமசுந்தரம் காவல்நிலைய வாசலிலேயே, சககாவலர்கள் முன்னிலையில் பிரியாவை ஆக்ரோஷமாக தாக்கியுள்ளார். இதனால் காவல் நிலையமே பரபரப்பாக மாறியது. இந்த சம்பவங்கள் அனைத்தையும் அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க | எப்படி அரசியல் பண்ணுவது யோசிப்பது நான் இல்ல: பாஜக தலைவர் அண்ணாமலை பதற்றம்


இது குறித்த அறிந்த காவல்துறை உயரதிகாரிகள் பெருநகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றிய சோமசுந்தரத்தை தற்போது ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளனர். சொந்த வேலைக்காகவும், சொகுசு வாழ்க்கைக்காக பதவியை பயன்படுத்தும் அதிகாரிகள் அகல பாதளத்திற்குள் சிக்கிக் சின்னாபின்னமாவார்கள் என்பதற்கு எஸ்.ஐ.சோமசுந்தரமே ஒரு உதாரணம். 


மேலும் படிக்க | கால்சென்டர் அமைத்து பொதுமக்களிடம் பல லட்சம் மோசடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ