இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதா படிப்புகளுக்கு நீட் தேர்வு தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மூத்த அமைச்சர்களுடன் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.


நீட் தேர்வின் போது தமிழாக்கம் செய்யப்பட்ட வினாத்தாளில் தவறாக கேட்கப்பட்ட வினாக்களுக்கு கருணை மதிப்பெண்களாக 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்தது. இந்த தீர்பினை எதிர்த்து CBSE மேற்முறையீடு செய்துள்ளது.


இதனால் இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலா இன்றைய ஆலோசனைக் கூட்டம் முடிவெடுத்துள்ளது.


இதன்படி அடுத்தாண்டு முதல் சித்தா மற்றும் ஆயுர்வேதா படிப்புகளுக்கும் நீட் தேர்வு கொண்டு வரவுள்ளதை எதிர்த்தும், 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே கலந்தாய்வு நடந்த அனுமதி கோரியும் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது!