சேலத்தில் காவல்துறையினரின் கால்களை பிடித்து அழுத சகோதரிகளின் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ பார்ப்பதற்கே பதபதைக்கும் வகையில் உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சகோதரரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அடித்து இழுத்துச் சென்றதாக இந்த சகோதரிகள் குற்றச்சாட்டை வைத்துள்ளார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சேலம் மாமாங்கம் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் கஞ்சா விற்பனை செய்ததாக பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கஞ்சா மொத்த வியாபாரிகளிடம் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, அவர் அதை பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.


மேலும் படிக்க | கோவில்பட்டியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் படுகொலை - பழிக்குப் பழியா ?


இதுதொடர்பாக சேலம் கருப்பூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். காவல் துறை நடவடிக்கையில் பிடிபட்ட சதீஷ்குமாரிடம் கஞ்சா மொத்த வியாபாரிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சதீஷ்குமாருக்கு கஞ்சா விற்பனை செய்த கனகராஜ் என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சேலம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். அவரை கருப்பூர் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.


இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த தங்களது சகோதரரை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் அடித்து அழைத்து சென்றதாக கூறி, கனகராஜியின் சகோதரிகளான உமா, சுகன்யா ஆகிய இருவரும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று குற்றம் சாட்டினர். காவல்துறையிடம் தனது சகோதரரை விடுவிக்க நடவடிக்கை எடுக்ககோரி முறையிட்டனர். பின்னர்  இருவரும் காவல்துறையினர் காலில் விழுந்து கதறிஅழுதனர். உடனே காவல்துறையினர் இருவரையும் மனு வழங்க ஆட்சியர் அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர்.