வேலூரில் உள்ள காட்பாடி ரயில் சந்திப்பில் இருந்து ஆறாவது ஷ்ராமிக் சிறப்பு ரயில் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 1464 தொழிலாளர்கள் மற்றும் நோயாளிகளுடன் வெள்ளிக்கிழமை ஜார்க்கண்டில் உள்ள டாடநகருக்கு புறப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

CMC மருத்துவமனைக்கு வருகை தந்த நோயாளிகளைத் தவிர வேலூர், திருவண்ணாமலை, திருப்பதூர், ராணிப்பேட்டை மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் பணிபுரியும் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள் இந்த பயணத்தின் போது சொந்த மாநிலத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.


அண்டை மாவட்டங்களில் இருந்து இந்த தவிக்கும் தொழிலாளர்கள் சிறப்பு பேருந்துகள் மூலம் காட்பாடி சந்திப்பிற்கு கொண்டு வரப்பட்டு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர் எனவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



வருவாய் மற்றும் சுகாதாரத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட அதிகாரிகள், காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள் அவர்களை நிலையத்திற்கு வழிகாட்டி, இலவச உணவு, நீர் மற்றும் துப்புரவுப் பொருட்களை வழங்கினர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


முந்தைய சிறப்பு ரயில்களில், வேலூரில் உள்ள CMC மருத்துவமனைக்குச் சென்ற தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள் ஜார்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் பீகார் உள்ளிட்ட சொந்த மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


READ | தமிழகத்தில் இருந்து 4-வது சிறப்பு ரயில் மேற்கு வங்கத்திற்கு புறப்பட்டது!


முதல் சிறப்பு ரயில் மே 6-ஆம் தேதி 1140 பயணிகளுடன் காட்பாடியிலிருந்து ஜார்க்கண்டிற்கு இயக்கப்பட்டது. இதுவரை, மொத்தம் 9,167 நோயாளிகள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் காட்பாடியிலிருந்து தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர் என அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.


அதேவேளையில், டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து பீகார் ஷெரீப்பிற்கு 15-05-2020 அன்று 17:00 மணியளவில் 1464 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஷ்ராமிக் சிறப்பு ரயில் ஒன்று தனது பயணத்தை துவங்கியது. மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து குர்தா (ஒடிசா)-க்கு 15-05-2020 அன்று 18:00 மணியளவில் சுமார் 1464 பயணிகளை ஏற்றிக்கொண்டு மற்றொரு ஷ்ராமிக் சிறப்பு ரயில் தனது பயணத்தை துவங்கியதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.