TNEB Tamilnadu : கரண்ட்டை போலவே கரண்ட் பில்லும் ஷாக்கடிக்க வைக்கிறது. தமிழ்நாடு அரசின் 100 யூனிட் மானிய மின்சாரத்தை பயன்படுத்துவபவர்களை காட்டிலும், இந்த திட்டத்தில் இல்லாதவர்கள் கூடுதல் மின் கட்டணங்களை செலுத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் நீண்ட நாட்களாகவே எதிர்பார்ப்பது என்னவென்றால், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தான். ஏனென்றால், இந்த திட்டம் வந்துவிட்டால் மின்சார உபயோகத்தை Time of Day Tarrif அடிப்படையில் கணக்கிடுவார்கள். அப்போது, காலை மற்றும் மாலை நேரங்களில், அதாவது மின்சாரம் அதிக உபயோகத்தில் இருக்கும் நேரத்தில் குறைவாக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் குறையும். மற்றவர்களுக்கு கட்டணம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த திட்டம் குறித்து சோகமான செய்தியே வெளியாகியிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது, தமிழ்நாடு முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணி நிறைவடைய இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகும். இந்த திட்டத்துக்காக கோரப்பட்ட டெண்டர் நடவடிக்கைகளே இரண்டு ஆண்டுகளாக சென்று கொண்டிருக்கிறது. அதனால், அவை முடிந்து மக்களின் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர்கள் வருவதற்கு இந்த கால தாமதம் ஆகும். இப்போதைக்கு வணிகர்கள் மற்றும் பெரிய தொழிற்சாலைகளுக்கு மட்டுமே ஸ்மார்ட் மீட்டர்கள் முன்னுரிமையின் அடிப்படையில் பொருத்தப்படுகின்றன. வீடுகளுக்கு பொருத்துவது ஆமை வேகத்திலேயே இருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அரசின் 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டத்தில் பயனடைபவர்கள் இந்த திட்டத்தில் பயனாளிகளாக முடியாது. அவர்களுக்கு வழக்கம்போலவே மின் கட்டணம் கணக்கிடப்படும். 


மேலும் படிக்க | உங்க வீட்டில் கரண்ட் இல்லையா? இனி பட்டனை தட்டுங்க போதும்


மின்வாரிய துறையில் இருந்து வெளியான தகவலின்படி, ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டால் 2023 மின்சாரத்துறை விதிமுறைகளின் படி இப்போது வரும் மின் கட்டணத்தை விட 10 முதல் 20 விழுக்காடு குறைவாக இருக்கும். அதேநேரத்தில் அதிக மின்சார உபயோக நேரத்தில் மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு 10 முதல் 20 விழுக்காடு கட்டணம் கூடுதலாகவே இருக்கும் என தெரிவித்தனர். அதிக மின் உபயோகம் செய்யக்கூடிய நேரத்தில் 20 விழுக்காடு வரை பிளாட் கட்டணம் செலுத்தக்கூடியவர்கள் 35 லட்சம் வணிக வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் எனவும் மின்வாரியத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 


தமிழ்நாடு மின்சாரத்துறை வசூலிக்கும் இந்த தொகை அதிகமாக இருப்பதாக  ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். சட்டப்படி 5 விழுக்காடு வரை கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், இதனை கருத்தில் கொண்டு மின்சாரத்துறை இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஸ்மார்ட் மீட்டர்கள் முழுமையாக பொருத்தி முடிக்கும் வரை மின் கட்டணத்தை செலுத்துவதில் இருக்கும் குளறுபடிகளை முழுமையாக தீர்க்க முடியாது. ஆனால் அதற்காக எவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டும் என்பது தெரியவில்லை என்றும் ஆதங்கத்துடன் தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | ரூ.200.. அரசு பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ