தமிழ் மொழியை வாழ்த்தி வணக்கம் செலுத்தும் விதமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படுகிறது.  இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.  இப்பாடலை மனோன்மணீயம் பெ.சுந்தரனார் இயற்றியுள்ளார்.  இந்த பாடலை டிசம்பர்-17, 2021 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில பாடலாக அறிவித்து, அரசாணை வெளியிட்டார்.  அதன்படி தமிழ்த்தாய் வாழ்த்தான 'நீராரும் கடலுடுத்த' பாடலை தமிழ்நாட்டின் அனைத்து கல்வி நிலையங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும், விழா நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும் கட்டாயம் பாடவேண்டும் என்றும், அப்பாடலைப் பாடும்போது அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் எனவும் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



தமிழக முதல்வரின் இந்த அறிவிப்புக்கு அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பல தரப்பிலிருந்தும் ஏராளமான பாராட்டுக்கள் குவிந்து வந்தது.  இந்நிலையில் மதுரை செனாய் நகர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலரான அசோக்குமார் என்பவர் முதலவரின் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் வரிகளால் தமிழக முதல்வரின் உருவத்தை வரைந்து நன்றி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.



மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை தமிழக அரசின் மாநில பாடலாக அறிவித்தமைக்கு ஒரு தமிழனாய் நன்றியினை தெரிவித்து கொள்வதோடு, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக என்றும் அழியா புகழ்கொண்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலான நீராரும் கடலுடுத்த பாடலின் வரிகளைக்கொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உருவத்தினை வரைந்தும், இந்த நன்றி கடிதத்தினை உருவாக்கி உள்ளேன்.  இந்த கடிதத்தை வரும் பொங்கல் பண்டிகைக்குள் தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தபால் மூலமாக அனுப்பி வைக்க இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.


ALSO READ | முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பில் இருந்த 2 பேர் கைது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR