கண்ணதாசன் பற்றிய சில சுவாரசிய தகவல்கள்!!
ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், 20க்கும் மேற்பட்ட நாவல்கள் தந்த மாபெரும் படைப்பாளி.
சங்க இலக்கிங்களின் செழுமையையும், தத்துவங்களையும், அனுபவங்களையும், சமூக, அரசியல் விழிப்புணர்வை எளிமையான மொழிகளில் எழுதியவர் கண்ணதாசன் அவர்கள். இந்த மாபெரும் கவிஞருக்கு இன்று நினைவு நாள்.
கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள்:-
* கண்ணதாசன் பாடல்களை தானே எழுதுவதில்லை. சொல்லச் சொல்ல அவரது உதவியாளர்கள் எழுதுவார்கள்.
* கண்ணதாசன் எப்போதும் மதுவில் திளைத்துக்கிடப்பார் என்றொரு கருத்து உண்டு. ஆனால் கண்ணதாசன் பாடல்கள் எழுதும்போது மது அருந்தமாட்டார்.
*மிகவும் ரசித்து ருசித்து சாப்பிடுவார் கண்ணதாசன். அசைவ உணவுகள் அவருக்கு மிகவும் பிடித்தவை.
* கண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.