காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிக்குழு உறுப்பினராக தமிழக எம்.பி.யான ஜோதிமணி நியமனம்!!
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிக்குழு உறுப்பினராக தமிழக எம்.பி.யான ஜோதிமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிக்குழு உறுப்பினராக தமிழக எம்.பி.யான ஜோதிமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து அதற்கான வேலைகளை காங்கிரஸ் கட்சி தொடங்கிவிட்டது . தேர்தல் பணி குழுக்களையும், உறுப்பினர்களையும் நியமிப்பது உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக களம் இறங்கிவிட்டது. இந்த வகையில், தமிழ்நாடு, புதுச்சேரி, கோவா மாநிலங்களுக்கான காங்கிரஸ் கட்சி மேலிட பொறுப்பாளராக கர்நாடகத்தை சேர்ந்த தினேஷ் குண்டு ராவ் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று மாநிலங்களையும் தினேஷ் குண்டுராவ் கவனிப்பார் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. இதேபோல் தெலங்கானா பொறுப்பாளராக தமிழக எம்.பி. மாணிக்கம் தாகூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து குலாம் நபி ஆசாத் விடுவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிக்குழு உறுப்பினராக தமிழக எம்.பி.யான ஜோதிமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவருக்கு உதவ சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏ.கே.ஆண்டனி, அகமது படேல், அம்பிகா சோனி, கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக், ரந்தீப் சிங் சுர்ஜிவாலா ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
ALSO READ | அரசின் ஒப்புதலுக்கு முன்னரே, பள்ளியை திறக்கும் தேதியை முடிவு செய்த தனியார் பள்ளிகள் ..!!!
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி செயற்குழு உறுப்பினர்கள், புதிய பொதுச்செயலாளர்கள், மாநிலங்களுக்கான மேலிடப் பொறுப்பாளர்கள், ஆலோசனைக் குழு, தேர்தல் குழு என பல்வேறு நியமனங்களை வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழுவின் உறுப்பினராக ஜோதிமணி நியமிக்கப்பட்டிருக்கிறார். மாநில கமிட்டிகளுக்கான 17 மேலிடப் பொறுப்பாளர்களில் மாணிக்கம் தாகூர், செல்லக்குமார் இடம்பெற்றிருக்கின்றனர். தெலுங்கானா மாநில மேலிடப் பொறுப்பாளராக மாணிக்கம் தாகூரும் ஒடிஷா பொறுப்பாளராக செல்லக்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.