சென்னை, மதுரை, கோவை நகரங்களில் 2000 மின்சார பேருந்துக்கள் விரைவில் இயக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து பள்ளி வாகனங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.


இந்நிலையில் இன்று சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள செட்டிநாடு பள்ளி வாகனங்களை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடன் பேசிய அவர்.,  "ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டுபவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து பரிசீலிக்கப்படும்.


விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால்தான் லைசென்ஸ் ரத்து செய்யப்படுகிறது. பொதுவாக நகரங்களை விட கிராமப்புறங்களில்தான் ஹெல்மெட் போடுவதை கடை பிடிக்காமல் இருக் கிறார்கள். கிராமங்களில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகள் மூலம் அறிவுறுத்தப்படுகிறது" என தெரிவித்தார்.


விரைவில் தமிழகத்தில் முதற்கட்டமாக சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் 2000 மின்சார பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இந்த வருடம் 24, 205 மாணவர்களுக்கு பஸ்களில் இலவச பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பள்ளிக் கல்வித் துறையின் மூலம் இதனை வழங்க இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.


இந்நிகழ்வின் போது போக்குவரத்து துரை ஆணையர் சமய மூர்த்தி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.