கடந்த மாதம் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சபாநாயகர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து இன்று இவ்வழக்கின் விசாரணை நடைபெற உள்ளதால், சபாநாயகர் தனபால் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசு கொறடா ராஜேந்திரன் தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பதில் மனுக்களில் சட்டத்திற்கு உட்பட்டே 18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.


இந்நிலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செல்லாது என்று உத்தரவிடுமாறு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடா்பான முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வர உள்ளன.