சென்னை: தமிழக முன்னாள் முதல்வர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாளையொட்டி மத்திய அரசு சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலை வெளியிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதி இருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவரது கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு நினைவு தபால் தலையை இன்று வெளியிட்டுள்ளது.


சென்னை கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு சிறப்பு தபால் தலையை தமிழ்நாடு தலைமை அஞ்சல் அலுவலர் டி.மூர்த்தி வெளியிட, முதல் தொகுப்பினை தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பெற்றுக்கொண்டார்.


முன்னதாக, எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்கள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.



இதற்கு முன்னர் கடந்த 1990-ம் ஆண்டிலும் பாரத ரத்னா எம்.ஜி.ஆரை சிறப்பிக்கும் வகையில் மத்திய அரசு தபால் தலை வெளியிட்டு சிறப்பித்திருந்தது.