வழக்கை அரசியல் ரீதியாக பார்க்காமல் அறிவியல் ரீதியாக பார்க்க வேண்டும்: டிஐஜி

எஸ்எஸ்ஐ கொலை வழக்கை அரசியல் ரீதியாக பார்க்காமல் அறிவியல் ரீதியாக பார்க்க வேண்டும் என திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.
எஸ்எஸ்ஐ கொலை வழக்கை அரசியல் ரீதியாக பார்க்காமல் அறிவியல் ரீதியாக பார்க்க வேண்டும் என திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் எஸ்.ஐ-யாக பணியாற்றி வந்தவர் பூமிநாதன். அவர் சனிக்கிழமை இரவு வழக்கம் போல் நவல்பட்டு பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே இரண்டு இருசக்கர வாகனத்தில் ஆடுகளுடன் வந்தவர்களை சந்தேகத்தின் பேரில் விசாரிப்பதற்காக நிறுத்த முயன்றிருக்கிறார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் நிற்காமல் சென்றதையடுத்து அடுத்து அவர்களை விரட்டிச்சென்று சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கும் மேலாக புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட மூகாம்பிகை கல்லூரிக்கு அருகே களமாவூர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள பள்ளத்துப்பட்டி என்ற ஊருக்கு அருகில் அவர்களை துரத்திப் பிடித்துள்ளார்.
தப்பித்து ஓட முயன்றவர்களை பிடித்தது விட்டதாக தகவல் கொடுத்தும் இருக்கிறார். சக போலீசார் அங்கு செல்வதற்கு முன்பாக எஸ்எஸ்ஐ பூமிநாதனை கொலை செய்து விட்டு அவர் பிடித்து வைத்திருந்தவர்கள் தப்பியோடியிருந்தனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் உடலை கைப்பற்றி தனிப்படைகளை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இன்று அதிகாலை 2 சிறுவர்கள் மற்றும் 19 வயதான தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை தோவூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் விசாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ALSO READ: திருச்சி உதவி ஆய்வாளர் பணியின்போது வெட்டிப்படுகொலை
இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் காவல் நிலையத்தில் திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் சம்பவம் குறித்து விளக்கமளித்தார். அதில்,
எஸ்.எஸ்.ஐ படுகொலைக்கு பின்பு 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தனித்தனியாக துப்புகளை சேகரித்ததன் அடிப்படையில் 3 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதில் ஒருவர் மணிகண்டன் மற்ற இருவர் சிறார்கள்.
சம்பவ இடத்தில் கிடைத்த சில தடையங்கள் சிசிடிவி வீடியோ காட்சிகளை கொண்டு குற்றவாளிகள் பிடிக்கப்பட்டுள்ளனர்.
எஸ்எஸ்ஐ கொலை வழக்கை அரசியல் ரீதியாக பார்க்காமல் அறிவியல் ரீதியாக பார்க்க வேண்டும். எஸ்எஸ்ஐ பின்புறத்திலிருந்து தாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்களின் உடற்கூறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன். முன்புறமாக நின்று தாக்கியிருந்தால் எஸ்எஸ்ஐ தடுத்திருக்கலாம்.’ என்று கூறினார்.
‘குற்றவாளிகளில் சிறார்கள் விடுத்து மணிகண்டன் போதையில் இருந்ததாக கூறுகிறார்கள். எனினும் இன்னும் அது உறுதிபடுத்தப்பட வில்லை. காவல்துறையினர் இரவு நேர ரோந்து பணிகளின் போது பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். ஆயுதங்கள் எடுத்து செல்வது குறித்தும் பரிசீலிக்கப்படும்.
சிறார்களின் செயல்களை அவர்களின் நண்பர்களை மற்றும் அவர்களின் செயலில் மாற்றம் உள்ளதா என்பதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.
இந்த வழக்கு திருப்திகரமான பாதையில் செல்கிறது. நீதிமன்றத்தில் சாட்சிகள் சமர்பிப்பதை பொறுத்து அதிகபட்ச தண்டனைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
சாட்சிகள் பொறுத்து ஆயுள்தண்டனை அல்லது மரணதண்டனை கூட வழங்கப்பட வாய்ப்புள்ளது. இரண்டு இளஞ்சிறார்கள் சிறுவர்களுக்கான குற்ற நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். காவலர்களும் தங்களுடைய பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். இரவு நேரத்தில் இருவராக செல்ல வேண்டும் என்று காவலர்களுக்கு அறிவுருத்தி உள்ளோம்.
சார்ஜ் ஷீட் file செய்ய உள்ளோம். இறந்த பூமிநாதன் சிறுவர்களின் பெற்றோரிடம் பேசினாரா என்பது தொடர்பாக தொடர் விசாரணை நடந்து கொண்டிருப்பதால் இப்போதைக்கு சொல்ல முடியாது. பெரம்பலூரிலும் ஆடு திருட்டு சம்பவத்தில் பலரை கைது செய்துள்ளோம். ஆடு திருட்டு என்றால் அதை கண்டு கொள்வதில்லை என்று எடுத்துக் கொள்ள முடியாது. இரண்டு இளம் குற்றவாளிகளை சிறுவர் நீதிமன்றத்தில் தான் ஆஜர் படுத்துவார்கள் தண்டனை குறித்து நீதிமன்றம் தான் முடிவு செய்யும்.’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ALSO READ: திருச்சி போலீஸ் கொலை : 2 சிறுவர்கள் கைது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR